புதினங்களின் சங்கமம்

சிறுமிகளை முஸ்லீம்கள் கலியாணம் கட்ட தடை!! இதோ இலங்கை சட்டம் பாய்கின்றது!!

நாட்டில் நடைமுறையில் உள்ள முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு இஸ்லாமிய
பெண்களின் திருமண வயதை 18ஆக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க, வெளிநாட்டுத் தூதுவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலை கொழும்பு ஆங்கில ஊடகமான டெய்லி நியூஸ் வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து முஸ்லிம்
சமூகம் மீது அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வரும் அதேவேளை குற்ற உணர்வுடன் சமூகமும்
முடங்கிப் போயுள்ளது.

முஸ்லிம் தனியார் சட்ட விவகாரத்தில் தலையிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பொதுச்
சட்டத்துக்கமைவாக முஸ்லிம் பெண்களுக்கான விவாக வயதும் 18 ஆக மாற்றப்படவுள்ளதாகத்
தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்களுக்கு எடுத்துரைத்த பிரதமர், அந்த நாடுகளிலிருந்து
விவாக நோக்கில் இலங்கை வருபவர்களுக்கு இது தொடர்பிலான அறிவுறுத்தல்களை வழங்குமாறும்
வேண்டப்பட்டுள்ளது.