வேண்டுமென்றே தமிழர்களைப் பழிதீர்க்கும் சிங்களம்!! குண்டுத் தாக்குதலையடுத்த நிலை இதோ(Photos)
ஏன் இந்த (இனப்) பாகுபாடு ?
தமிழர்களுக்கு மட்டும் தானா தேவை பாதுகாப்பு?
ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் படுகொலைகளின் பின்னர் நாட்டில் இறுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகள் என்பது வடக்கு – கிழக்கில் வதிகின்ற தமிழர்களுக்கு மட்டும் தானோ என்று எண்ண வைக்கின்றன.
பணி நிமித்தம் பயணமே வாழ்க்கையாகி விட்ட நிலையில் அடிக்கடி யாழ் – மட்டக்களப்பு, யாழ் – கொழும்பு, யாழ் – திருமலை, திருமலை – மட்டக்களப்பு மார்க்கங்கள் ஊடாகப் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
எந்த மார்க்கமாயினும் சரி, நடப்பவற்றைப் பார்த்தால் போருக்குப் பின்னான காலத்தில் எந்தத் தலையிடியும் இல்லாமல் போய் வந்தவர்களை வேண்டுமென்றே பழி தீர்ப்பதாகவே உணரமுடிகிறது.
ஏனெனில் – தமிழர் பிரதேசங்களுக்கு வெளியே எந்தவொரு இடத்திலும் இந்தளவுக்குக் கெடுபிடிகள் இல்லை.
அண்மையில் நேரடியாகப் பார்த்த அனுபவம் ஒன்று – தமிழ் மக்கள் பயணிக்கும் இ. போ. ச பஸ்கள் அனைத்தும் பல இடங்களில் மறிக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு, அடையாள அட்டை பரிசீலிக்கப்பட்டு , பயணப் பொதிகளைச் சோதனையிட்ட பின்னர் குறிப்பிட்ட தூரம் நடந்து சென்று மீண்டும் பஸ்சில் ஏற அனுமதிக்கப்படுகின்றது.
காலையோ, மாலையோ, நண்பகலோ, நடுநிசியோ தமிழர்களுக்கு இது தான் தலைவிதி.
ஆனால், தனியே சிங்கள மக்கள் பயணிக்கின்ற உள் ஊர்களுக்கிடையிலான பஸ் சேவைகள் மறிக்கப்படுவதுமில்லை, சோதனையிடப்படுவதுமில்லை. இது என்ன நியாயம்?
அப்படியென்றால் ,
பொதுப் போக்குவரத்து சேவைகளில் வருகிற தமிழர்கள் மட்டும் தானா குண்டைக் காவப் போகிறார்கள் ?
சிங்கள மக்களோடு ஊடுருவிய எவரேனும் கொண்டுபோக மாட்டார்களா? அல்லது சிங்கள மக்கள் எவரையும் தீவிர வாதிகள் பயன்படுத்த மாட்டார்களா?
ஏன் இந்தப் பாரபட்சம் ?
அதை விட இன்னுமொரு சந்தேகம்.
அதாவது, பொதுப் போக்குவரத்து சேவைகள் மற்றும் சிறிய ரக வாகனங்கள் அனைத்தும் துருவித் தோண்டிப் பார்க்கப்படுகின்றன என அறிந்தும், அத்தகைய வாகனங்களையா தீவிர வாதிகள் பயன்படுத்தப் போகிறார்கள்?
மண் , கல் நிறைத்தபடி செல்லும் டிப்பர்களோ, ஏனைய மூடப்பட்ட கனரக வாகனங்கள் எவையுமோ சோதிக்கப்படுவதில்லை. ஒப்புக்காக சாரதியின் ஆளடையாளம் பரிசீலிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்ட பின் சோதனைச்சாலையைக் கடந்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. மண்ணுக்கடியில் – மூடிய வாகனத்தில் என்ன போகிறது என்பதை யாரறிவர்?
ஆக, இது தமிழர்களை மட்டும் அலைக்கழிக்கும் ஒன்று என்று நான் யோசிப்பதில் தவறென்ன?
நன்றி
முகப்புத்தகப் பதிவு