புதினங்களின் சங்கமம்

மணமகனைப் பார்ப்பதற்கு ஆயத்தமான செவ்வந்தி விபத்தில் பலி!

மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் மஹியங்கனை ரஜமகா விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் பின்புறம் வேகமாக வந்த கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் ரிதிமாலியத்த 12, ஊரணிய பிரதேசத்தைச் சேர்ந்த ஹிமான்ஷி செவ்வந்தி (24) என்ற திருமணமாகாத யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யுவதியை பார்ப்பதற்காக மணமகன் ஒருவர் இன்று (16) வீட்டுக்கு வரவிருந்த நிலையில், தேவையான பொருட்களை கொண்டு வருவதற்காக அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரியுடன் மஹியங்கனை நகருக்கு சென்ற போதே விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும், விபத்தில் காயமடைந்த ஏனைய மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், 15 வயது சிறுமி பதுளை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடுவெல வெலிவிட்ட பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x