அமைச்சர் ரிஷாத் பதியுதீன் FCID இல் ஆஜர்
லங்கா சதொச நிறுவனத்தில் அரிசி கொள்வனவின் போது இடம்பெற்றுள்ள மோசடி சம்பந்தமாக வாக்குமூலம் வழங்குவதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பொலிஸ் நிதி மோசடி பிரிவில் ஆஜராகியுள்ளார்.
இன்று காலை 10 மணியளவில் அமைச்சர் அங்கு ஆஜராகியுள்ளதுடன், தற்போதும் அவர் பொலிஸ் நிதி மோசடி பிரிவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
2014 -2015ம் ஆண்டு காலப்பகுதியில் லங்கா சதொச நிறுவனத்திற்கு 257000 மெட்ரிக் தொன் அரிசி கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடி தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.