FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

5ம் வகுப்பு கொலசிப் பாஸ் பண்ணினால் பிள்ளையுடன் சேர்ந்து குடும்பமாக கனடாவுக்கு போகலாம்!!

கனகசபை குழந்தையர் என்ற  பேஸ்புக் ஒன்றில் யாரோ ஒருத்தன் அவிழ்த்து விட்ட வெடிவானத்தை 3500 பேய்க் குஞ்சுகள் பகிர்ந்து சாதனை படைத்திருக்குதுகள்…. ஏனென்றால் அவன் அவிழ்த்து விட்ட விதம் அப்புடி…. இப்புடித்தான் ஏராளமான விசர்க் குஞ்சுகள், பேய்க்குப் பேன் பார்த்ததுகள் எல்லாம் சமூகவலைத்தளத்தில் வாறது எல்லாம் உண்மை என்று நம்பி ஏமாந்து போகுதுகள்… இங்க சும்மா இருந்து போட்டு வெளிநாட்டுக்குப் போனால் மரத்தில காய்த்து தொங்கிற  பணத்தை பிடுங்கி எடுக்கிறது மட்டும்தான் வேலை என்று நினைக்குதுகள் இந்த பேய்க் குஞ்சுகள்….பகிர்ந்துவர்களில் சிலர் லேசுப்பட்டவர்கள் அல்ல… வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் வலயக்கல்விப் பணிமனை உயர் அதிகாரி மற்றும் அரச உயர் அதிகாரிகள், அரசாங்க ஊழியர்கள் போன்றவர்களும் இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…

இவ்வாறு பகிர்ந்தவர்களின் பெயர் விபரங்களை இங்கு வெளியிட ஆசையாகத்தான் உள்ளது. ஆனால் அவர்களும் பாவம்தானே என்ற எண்ணத்தில் அவர்களின் பெயர் விபரங்களை நாம் வெளியிடாது விட்டுள்ளோம்…

இந்த கனகசபை குழந்தையின் பதிவு முற்று முழுதான ஒரு தவறான பதிவாகும். கனடா துாதரகம் இது பொய் என உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த பேஸ்புக் பக்கத்தை இயக்குபவனின் தொலைபேசி இலக்கம் +94 76 272 7024 ஆகும். வீடுகள் காணிகள் விற்கும் புறோக்கர் வேலை செய்பவன். இந்த தொலைபேசி இலக்கத்தில் தொர்பு கொண்டு இவனிடம் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். இவன் தொடர்பாக உடனடியாக சைபர் கிறைம் மற்றும் உள்ளூர் பொலிசாரிடம் முறைப்பாட்டை பதிவு செய்யுங்கள்.

எமது செய்தி இணைப்பை அவனது முகப்புத்தகத்தில் கருத்துப் பகுதியில் பதிவிடுங்கள்… அவனது தகவல்களைப் பதிந்த அப்பாவிகள் காப்பாற்றப்படுவார்கள். ஆனால் நீங்கள் கருத்துப் பகுதியில் இணைப்பை பதிவு செய்தாலும்  உடனடியாக அவன் அகற்றி விடுகின்றான்….

கனடா நாட்டில் வேறு நாட்டு சிறுவர்கள் நுழைவதற்கான குடியேற்ற படிமுறைகளை நாம் தந்துள்ளோம். அதனை இங்கே அழுத்தி பார்வையிடலாம்…

https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/visit-canada/minor-children-travelling-canada.html?fbclid=IwAR3RpBls5igcTLxitnqOcCOkzr_Bux_vbVtVUSZ3Kf02iQNuq_SboEG8JlI

சரி கனகசபை குழந்தை அப்படி என்ன அவிழ்த்து விட்டுருக்கிறான் என்பதை அப்படியே கீழே தந்துள்ளோம்…

இந்த தகவல் பலருக்கு தெரிந்திருக்கும் தெரியாதவர்களுக்கு மட்டும் இலங்கையில் கொலசிப் பாஸ் பண்ணியவர்கள் கனடாவுக்கு வரலாம்.
மூன்று வருடங்கள் உள்ளே பாஸ் பண்ணியவர்கள் 2020, 2021, 2022 விண்ணப்பிக்கலாம். தனியாக பிள்ளை வர அனுமதிக்க மாட்டார்கள். இவர்களோடு தந்தையோ தாயோ உதவியாளராக வரலாம். உதவியாளராக வருபவர் வேலை அனுமதி 5 கிழமையில் கிடைக்கும். work permit அதன் ஊடாக 24 மாதங்களில் PR பெற முடியும். மிகுதி உள்ள family members PR கிடைத்த பிற்பாடு sponsor செய்து கனடாவில் நிரந்தரமாக குடும்பமாக வசிக்கலாம்.
சிங்கள இனத்தவர் பலர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழர்கள் சிலரும் ஆனால் பக்கத்து வீட்டுக்கு கூட தெரிய வராது பார்த்து கொள்கின்றனர் கெட்டியான நமது இனத்தவர் (தமிழர்கள்)
இதற்கு பெரிதாக செலவும் இல்லை. இங்கே உள்ள (கனடாவில்) legal aid என்று இமிக்கிறேசன் லோயர்களுடன் ஒட்டி உள்ளவர்கள் தங்களுக்கு வருமானம் இல்லை என்றால் எதையும் செய்யப் போவதில்லை. சரியான தகவலை பொது வெளியில் சொல்லப்போவதும் இல்லை. இங்கே உள்ள தமிழர்களில் பலர் தங்களது உறவினர்கள் இங்கே வருவதை விரும்புவதும் இல்லை. எனக்கு இதில் பல அனுபவம் உள்ளது. இங்கே வசிக்கும் எனது ஊரவர்கள் பலரது சொந்த சகோதரத்தின் பிள்ளைகளை கூட கப்பலில் இருந்து கனடா மண்ணில் இறக்க முயற்சித்த போது (சண் சீ) இறங்க விட வேண்டாம் திருப்பி அனுப்புங்கள். அவர்கள் புலிகள் என்று அன்று கொடி பிடித்த பல தமிழர்களும் அதுவும் எங்கள் ஊரவர்களே (மாசார் பளை கிளிநோச்சி) உள்ளனர். எல்லா ஊரிலும் இப்படியானவர்களும் இருப்பார்கள் என்பது எனது கணிப்பு.
எம் இனத்தில் பல நல்லவர்களும் இருப்பார்கள் அவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி உங்கள் இலங்கையில் உள்ள உறவினர்கள் வர உதவலாம். கனடாவில் உறவினர்கள் இருக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை. ஆனால் இங்கே உள்ள அதற்கான பாடசாலைகளில் நேரடியாக சென்று அதன் வேலையை செய்வது மிக மிக சுலபமாக விசா கிடைக்க உதவும்.
மேலதிக தகவல் தேவை என்றால் தொடர்பு கொள்ளவும்
சுதன் நடா கனடா.