புதினங்களின் சங்கமம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடக்கும் அலங்கோலம்!! அதிகாரிகள் கவனிப்பார்களா??

யாழ்.போதனா வைத்தியசாலையில் தாதியர்களால் கிளினிக் செல்லும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
கிளினிக் செல்லும் நோயாளர்கள் மருத்துவரிடம் செல்வதற்கு முதல் தமது ரிக்கட் எடுக்க வேண்டும். ரிக்கெட் எடுக்கச் சென்றால் ரிக்கட் வழங்கும் அறையில் யாருமற்று, ரிக்கட் வழங்குபவர் வரும் மட்டும் மணித்தியாலக் கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள்.
மருத்துவரிடம் காட்டி விட்டு மருத்துவர் எழுதும் மருந்து கொப்பியை மருந்து எடுக்கும் இடத்தில் கொண்டு செல்லும் போது அங்கே மருந்து வழங்குநர்களால் மருந்து இல்லை என்று கூறப்படுகிறது.
மருத்துவச் சான்றிதழ் எடுக்க வருகின்றவர்கள் எங்கே மருத்துவச் சான்றிதழ் எடுப்பது என்று தெரியாமல் வைத்தியசாலையையே சுற்றி வருகின்றார்கள். அங்கே தாதியரிடம் கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார்கள்.
கடந்த வியாழக்கிழமை (13) யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கண் கிளிக் சென்ற நோயாளர்கள் எதிர்கொண்ட சிரமங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிதனர்