கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி 6 ஆமிக்காரர்கள் சிதறிப் பலியானதால் அப்பகுதியில் பரபரப்பு!! (video)
கிளிநொச்சியில் தொடருந்துடன் இராணுவ வாகனம் மோதுண்டதில் அதில் பயணித்த 6 படையினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 படையினர் படுகாயமடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இந்தச் சம்பவம்
இடம்பெற்றது. இராணுவ ட்ரக் வாகனம் தொடருந்துப் பாதையைக் கடக்க முற்பட்ட போது, தொடருந்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது…