யாழில் 5 லீற்றர் பெற்றோலுக்கு ஆசைப்பட்ட குடும்பப் பெண்ணுக்கு நடந்த கதி!! ஆசுப்பத்திரி ஊழியர் செய்த அலங்கோலம்!!
5 லீற்றர் பெற்றோல் பெறுவதற்காக யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள வைத்தியசாலையில் கடமை புரியும் சுகாதார உதவியாளரிடம் தனது கணவனின் மோட்டார் சைக்கிளை பெயர் மாற்றம் செய்த குடும்பப் பெண் ஒருவர் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார். மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த குறித்த குடும்பப் பெண் தனது தங்கையின் கணவரின் தம்பியான வைத்தியசாலை சுகாதார உதவியாளரிடம் தனது கணவனின் மோட்டார் சைக்கிளை பெற்றோல் பெறுவதற்காக பெயர்மாற்றம் செய்ததாகத் தெரியவருகின்றது. கணவர் அண்மையிலேயே மத்தியகிழக்கு நாடு ஒன்றுக்கு வேலை வாய்ப்பு பெற்று சென்றுள்ளார். தனது பிள்ளைகளை ஏற்றி இறக்குவதற்காக பெற்றோலுக்கு அலைந்த குறித்த குடும்பப் பெண்ணை பெற்றோல் ஆசை வார்த்தை கூறி மோட்டார் சைக்கிளை பெயர் மாற்றம் செய்துள்ளார் வைத்தியசாலை உதவியாளர். கணவருக்கு தெரியாது கணவரின் கையொப்பமும் வைக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. பெயர் மாற்றம் செய்த பின்னர் மோட்டார் சைக்கிளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலை உதவியாளர் விற்றுவிட்டதாகவும் சுகாதார ஊழியர்களுக்கு பெற்றோல் கொடுக்கபடுவதை அறிந்து குறித்த ஊழியரிடம் வினாவிய போதே இவ்விடயம் வெளிவந்ததாகவும் தெரியவருகின்றது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் முறையிடப்பட்டு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.

