தேவையான எரிபொருள் கையிருப்பில்; 36,000 மெ.தொன் பெற்றோல் நாளை வருகிறது!
நாட்டுக்கு நாளை வியாழக்கிழமை 36,000 மெற்றிக் தொன் பெற்றோல் வந்துசேரும் என எதிர்பார்ப்பதாக இலங்கை பெற்றோலிய களஞ்சியசாலையின் தலைவர் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவா், 40,000 மெற்றிக் தொன் டீசல் தற்போது முத்துராஜவெல களஞ்சியத்தில் இறக்கப்பட்டு வருவதாகவும்
எதிர்வரும் 19 ஆம் திகதி மேலும் 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் கொண்டுவரப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டில் போதிய எரிபொருள் இருப்பதால் மக்கள் தேவையில்லாமல் அஞ்ச வேண்டியதில்லை. அத்துடன், வரிசையில் நின்று அதிக பெற்றோலை வாங்கி இருப்பு வைத்து செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் எனவும் இலங்கை பெற்றோலிய களஞ்சியசாலையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
