புதினங்களின் சங்கமம்

யாழ் பல்கலைக்கழக மாணவ தலைவர், செயலாளர் கைது!! பரபரப்பாகின்றது பல்கலை!!

யாழ் பல்கலைக்கழகத்தினுள் இன்று அதிகாலை முதல் நடந்த தேடுதலின் போது விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படம், சினைப்பர் துப்பாக்கிக்குரிய தொலைநோக்கி, இராணுவச் சப்பாத்து என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்பு கூறுகின்றது. இதனையடுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் ஆகியோர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர் ஒன்றியக் கட்டடம் தற்போது இராணுவத்தின் வசம் வந்துள்ளதாக தெரியவருகின்றது.