புதினங்களின் சங்கமம்

யாழில் ரவுடிகளின் கொலை வெறி!! ஈட்டியால் குத்தி ஒருவர் பலி!! பலர் படுாகயம்!! (Photos)

தென்மராட்சி-பாலாவிப் பகுதியில் இன்று (30)
செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாள் வெட்டு மற்றும்
இரும்புக் கம்பித் தாக்குதலில் ஒருவர் பலியாகி இருப்பதுடன் மேலும் ஏழு பேர்
படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலாவிப் பகுதியில்
செவ்வாய்க்கிழமை மாலை சுமார் முப்பது பேர் அடங்கிய கும்பல் ஒன்று வாள்கள்,
ஈட்டிகள் மற்றும் கூரிய ஆயுதங்களால் வீதியில் நின்றவர்கள், வீட்டில்
இருந்தவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவர் மீதும் தாக்குதல்
நடாத்தியுள்ளது.

இச் சம்பவத்தில் தனது வீட்டில் இருந்த பாலாவியைச் சேர்ந்த 62வயதான
தம்பிராஜா பொன்னுத்துரை என்பவருடைய மார்பில் ஆயுதக் கும்பல் ஈட்டியால்
குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகியுள்ளார்.

மேலும் வீதியால் சென்ற பாலாவியைச் சேர்ந்த 25வயதான யே.திலிசாந், பாலாவி
வடக்கைச் சேர்ந்த 39வயதான சோ.கணேசமூர்த்தி, 46 வயதான தம்பிராஜா யோகராஜா, 38
வயதான த. கவிதரன், 52 வயதான நடராஜா வளர்மதி, 35 வயதான செல்வராஜா குமார்
மற்றும் 39வயதான வைரமுத்து தவசீலன் ஆகியோர் வாள் வெட்டு மற்றும் கல்
வீச்சுத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார
வைத்தியசாலையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்தவர்களில்
ந.வளர்மதி,செ.குமார் மற்றும் கணேசமூர்த்தி ஆகியோர் மேலதிக சிகிச்சைக்காக
யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.