புதினங்களின் சங்கமம்

இலங்கையில் முஸ்லீம் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடரும் என அமெரிக்கா எச்சரிக்கின்றது!!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை பொறுப்பேற்ற ஐ.எஸ். பயங்கரவாதிகள் பாரியளவிலான மேலும் பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) றொய்டர்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கைக்கான பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்ந்து நீடிப்பதாகவும், தாக்குதல் சதிகாரர்கள் நாட்டுக்குள் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல்தாரிகளின் செயற்பாடு முற்றாக முடக்கப்பட்டவில்லை என்பதனை உறுதிபடுத்துவதற்கான ஆதாரங்கள் காணப்படுவதாகவும், தாக்குதல் திட்டமிடல்கள் நடைபெற்று வருவதாக தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.