யாழில் கணவர் விவாகரத்து!! அரச ஊழியரான மனைவியுடன் வாழ்ந்து வந்த மகள் கர்ப்பம்!!! மனைவியின் கள்ளக் காதலன் காரணமா?
அரச ஊழியரான பெண் ஒருவர் கணவனை கடந்த ஒரு வருடத்திற்கு முன் விவாகரத்து செய்து 17 வயதான பிரபரல பாடசாலை மாணவியான தனது மகளுடன் தனித்து வாழ்ந்து வந்த நிலையில் குறித்த மாணவி தற்போது கர்ப்பமாக இருப்பது கண்டு பிடிக்கபட்டுள்ளது. இது தொடர்பாக கணவர் சட்ட நடவடிக்கை எடுக்க ஆயத்தமான போது மனைவி தனது மகளுடன் மாயமாகியுள்ளார்.
யாழில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் DO ஆக பணியாற்றும் 41 வயதான குடும்பப் பெண் ஒருவர் தன்னை கணவன் தாக்குவதாக கூறி பொலிசாரிடம் முறையிட்டு அதன் பின்னர் தனது கணவனை கடந்த வருட தொடக்கத்தில் விவாகரத்து செய்தார். இருவரும் பல்கலைக்கழகத்தில் கற்கும் போதே காதலித்து திருமணம் முடித்தவர்கள். கணவர் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் முகாமையாளராக கடமையாற்றுகின்றார். மனைவி ஏற்கனவே பணியாற்றிய அலுவலகத்தில் கடமை புரிந்த ஊழியர் ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டு அந்த அலுவலகத்தில் சென்று ஒரு சில வருடங்களுக்கு முன் அந்த ஊழியர் மீது தாக்குதலும் மேற்கொண்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக மனைவிக்கு இடமாற்றமும் வழங்கப்பட்டிருந்தது.
அதன் பின்னரும் அந்த ஊழியருடன் தொடர்பு என்று சந்தேகப்பட்டு வந்த கணவன் மனைவி மீது அடிக்கடி தாக்குதல் மேற்கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாகவே விவாகரத்து நடைபெற்றது. விவாகரத்தின் பின் தனது மகளுடன் தனித்து வாழ்ந்து வந்த DO வெளிப்படையாகவே கணவன் சந்தேகப்பட்ட அந்த ஊழியரை தனது வீ்ட்டுக்கு வந்து செல்ல அனுமதித்திருந்தார். இந் நிலையில் தற்போது தனது 17 வயதான மகள் கர்ப்பமாக உள்ளதாகவும் அதற்கான ஆதாரங்களை கணவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். தனது மனைவி மற்றும் கள்ளக்காதலனான அலுவலக ஊழியர் போன்றவர்களின் புகைப்படங்களையும் அனுப்பி அவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மகளின் கர்ப்பம் தொடர்பாக சம்மந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பொலிசாருக்கும் முறையிட்டும் உள்ளார்.

