புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி விபத்தில் முதியவர் பலி!!! (Photos)

கிளிநொச்சி- சேவியர்கடை சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவரை
பின்னால் வந்த மோட்டார் சைக்கிலில் பயணித்தவர் வேகத்தை கட்டுப்படுத்த
முடியாமல் துவிச்சக்கர வண்டியில் சென்றவருடன் மோதுண்டு இவ் விபத்து
இடம்பெற்றுள்ளது.

துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த சதாசிவம் சங்கநிதி வயது
83 என்ற முதியவரை இவ் விபத்தில் பலத்த காயங்களுடன்;
நோயாளர் காவு வண்டியில் கிளிநொச்சி பொது

வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று  சிகிச்சை அளித்தபோதும்;சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிலில் பயணித்தவரும் பலத்த காயங்களுடன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கவிடயம்.

இவ் விபத்து& தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகிறார்கள்.