புதினங்களின் சங்கமம்

காணி சீர் திருத்த ஆணைக் குழுவின் ஆவணம் இரகசியமாக அநுராதபுரத்திற்கு நகர்த்தப்பட்டது.

வடக்கு மாகாண காணிச் சீர் திருத்த ஆணைக் குழுவின் ஆவணங்கள் அனைத்தும் நேற்று மாலை அநுராதபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
வடக்கு மாகாண காணிச் சீர் திருத்த ஆணைக் குழுவின் அலுவலகம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக வளாகத்தில் இயங்கிய நிலையில் இதன் ஆவணங்களை அநுராதபுரம் அனுப்புமாறு அறிவிக்கப்பட்ட நிலையில் பெரும் எதிர்ப்புக்கள் கிளம்பியதோடு யாழ்ப்பாணம் மாவட்டம் மற்றும் கிளிநொச்சியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இந்த அலுவலக ஆவணங்களை எடுத்துச் செல்லக்கூடாது எனவும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றிய பின்பும் கடந்த 4ம் திகதி இந்த ஆவணங்களை ஏற்றிச் செல்லப்படவிருந்த சமயம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது இதன்போது யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரிடம் ஓர் மனுவும் கையளித்தனர். கையளித்த மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசண் குறித்த விடயம் ஆணைக்குழுவின் முடிவு என தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் உணனடியாக ஏதும் செய்ய முடியவில்லை எனப் பதிலளித்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை இரகசியமான முறையில் ஆவணங்கள் அனைத்தும் ஆணைக்குழுவின் வாகனத்தில் அநுராதபுரம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

May be an image of 1 person and standing