புதினங்களின் சங்கமம்

யாழ் வரணியில் கோயிலில் பக்தர்களுடன் பூசை நடத்திய ஐயருக்கு நடந்த கதி!!

யாழ்.கொடிகாமம் வறணி பகுதியில் இடம்பெற்ற பூசை வழிபாட்டில் கலந்து கொண்ட பூசகர்
உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

வறணி வடக்கு பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் கிராம மக்கள் இணைந்து பூசை வழிபாடு ஒன்றை
நடத்தியிருக்கின்றனர். குறித்த விடயம் தொடர்பான தகவல் பொலிஸாருக்கு கசிந்த நிலையில்

சம்பவ இடத்தை முற்றுகையிட்ட கொடிகாமம் பொலிஸார் சம்பவ இடத்திலிருந்தவர்களை விசாரணை
செய்துள்ளதுடன் கோவில் பூசகர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளனர்.