யாழில் சம்பவம்!நாளை பிரான்ஸ் மாப்பிளையுடன் கலியாணம்!! பக்கத்து வீட்டு குடும்பஸ்தருடன் பட்டதாரி மணமகள் மாயம்!!
யாழ் அரியாலைப் பகுதியைச் சேர்ந்த 27 வயதான பட்டதாரி யுவதிக்கு நாளை செல்வச்சந்நிதி ஆலயத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த வேளையில் நேற்று குறித்த யுவதி பக்கத்து வீட்டில் வசித்து வந்த 34 வயதான குடும்பஸ்தருடன் தலைமறைவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. பிரான்சில் இருந்து வந்த மணமகனின் வீட்டில் பொன்னுருக்கும் நடந்து முடிந்திருந்த நேரத்தில் குறித்த யுவதி இவ்வாறு தலைமறைவாகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யுவதியுடன் தலைமறைவான குடும்பஸ்தரின் வீடு யுவதியின் உறவுகளால் முற்றுகையிடப்பட்டது. குறித்த குடும்பஸ்தர் திருமணமாகி 7 வருடங்கள் ஆன நிலையிலும் குழந்தைகள் இல்லை என்ற விரக்தியில் இருந்துள்ளதாக அயலவர்கள் மூலம் தெரியவருகின்றது. இதே வேளை குறித்த யுவதியுடன் குடும்பஸ்தர் நெருங்கிப் பழகி வந்தது ஏற்கனவே மனைவிக்கு தெரிந்திருந்தது எனவும் மனைவி அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காது இருந்துள்ளதாகவும் அயவலர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இச் சம்பவத்தையடுத்து பிரான்சிலிருந்து வந்த மாப்பிளை இன்று காலை கொழும்புக்கு சென்றுவுிட்டதாகவும் ஏற்கனவே மாப்பிளைக்கு யுவதியின் உறவுகள் தாலிக் கொடி செய்வதற்காக 30 லட்சம் ரூபா பணம் கொடுத்துள்ளதாகவும் அந்தப் பணமும் அதோ கதிதானா என்பது இதுவரை தெரியவில்லை.

