ரஞ்சனுடன் சிறைக்குள் செல்பி: சிறை அதிகாரி ஒருவர் பணி இடைநிறுத்தம்!
சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவைச் சந்தித்து செல்பி எடுத்துக் கொண்ட விடயம் தொடர்பில் சிறை அதிகாரி ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்காவுடன் சிறைக்குள் ‘செல்பி’ எடுப்பதற்கு அனுமதி வழங்கிய சிறைச்சாலை அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது குறித்த அதிகாரியை பணி இடைநிறுத்தியிருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

