ராக்கிங் கொடூரம்!! பல்கலைக்கழக மாணவன் கவலைக்கிடமான நிலையில்!!
சிரேஷ்ட மாணவர்களால் தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்படும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவனின் நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாகவுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவன், அவசர சிகிச்சைப் பிரிவிலேயே சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவன் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறி, தலையில் அதிக இரத்தப் போக்குடன் நேற்று தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மாணவனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பின்றி விசாரணைகளை முன்னெடுத்து, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

