யாழ் மல்லாகத்தில் கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு! (Video)
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்லாகம் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மல்லாகத்தைச் சேர்ந்த 70 வயதுடைய நல்லதம்பி கதிர்காமலிங்கம் என்ற முதியவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
அவருடைய மரணத்துக்கான காரணம் தெரியவரவில்லை.
மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.


