புதினங்களின் சங்கமம்

பச்சைக் கள்ளன் ரிசிகேசி லோயர் அப்பாவியை சிறையில் அடைத்தது நியாயமா? வடகொரியா ஆட்சியா யாழ்ப்பாணத்தில் நடக்கின்றது?

ரிசிகேசன் தொடர்பாக எமது இணையத்தளத்தில் வந்த பதிவுகள் செய்தியின் கீழே இணைக்கப்பட்டுள்ளன. 

காரைநகர் திக்கரை முருகன கோவிலில் தொண்டு வேலை செய்து கொண்டு திரிந்தவன் பொன்னம்பலம் உமாசங்கர். இவன் அந்த முருகன் கோவில் மனேஜர் என தன்னைத் தானே பலருக்கும் கூறிக் கொண்டு பல கள்ள வேலைகள் செய்து வந்தவன். இவனது ஊழல் மற்றும் மோசடிகள் காரணமாக இவனை குறித்த கோவிலிலிருந்து ஆலய ஆதினகர்த்தாக்களான காசிநாதர் பொன்னம்பலம் பரம்பரையினர் அகற்ற முற்பட்டனர். இதனால் கடும் கோபமடைந்த உமாசங்கர் குறித்த கோவிலுக்கு கள்ள உறுதி எழுத ஆயத்தமானான். அதன் பின் பல சட்டத்தரணிகளை தொடர்பு கொண்டு அவன் தனக்கு ஆலயம் தொடர்பாக உறுதி ஒன்று எழுதித் தரும்படி கேட்டும் நேர்மையான சட்டத்தரணிகள் அதற்கு மறுப்புத் தெரிவித்து அவனைத் துரத்திவிட்டார்கள்.

கள்ள உறுதி மூலம் கோவிலைக் கொள்ளையடிக்க முற்பட்ட கள்ளன் உமாசங்கர்….. 

ஏனெனில் குறித்த ஆலயத்தின் காணியானது ஆதினகத்தா பரம்பரையினரின் தனிப்பட்ட உரிமைச் சொத்து அதற்கான மூல ஆவணங்கள் உறுதி மற்றும் தோம்பு அனைத்தும் 1928 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையும் காணி கந்தோரில் பதிவில் உள்ளது. இவ்வாறான நிலையிலேயே கள்ள உறுதி எழுதி காசு வாங்கிப் பிழைப்பு நடத்தும் ரிசிகேசன் லோயரை உமாசங்கர் அணுகியுள்ளான். லட்சக்கணக்கான பணப்பறிமாற்றத்தின் பின்னர் ரிசிகேசன் லோயர் உமாசங்கருக்கு கள்ள உறுதி எழுதிக் கொடுத்துள்ளான்.

இந்தக் கள்ள உறுதி காணித்திணைக்களத்தின் ஊடாக பிரதேசசெயலகத்திற்கு பதிவுக்குப் போன போது அப்பகுதிக் கிராமசேவையாளர் ஊடாக அது கள்ள உறுதி என கண்டறியப்பட்டது. இதன் பின் இவனு்ககு உமாசங்கரின் செயற்பாட்டுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றில் TR34 என்னும் இலக்கத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறான நிலையிலேயே கள்ள உறுதி எழுதிய லோயரின் செயற்பாடுகள் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகின. அதனையே நாமும் வெளியிட்டிருந்தோம். இருப்பினும் ஏராளமான சமூகவலைத்தளங்களில் கள்ள உறுதி எழுதிய ரசிகேசன் லோயர் தொடர்பாக பதிவுகள் வந்திருந்த போதும் யாரோ ஒரு அப்பாவியை ரிசிகேசன் லோயரும் ஏனைய கள்ள உறுதி எழுதும் லோயர்மாரும் சேர்ந்து சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரியை ஏதோ ஒரு வகையில் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அந்த அப்பாவியை சிறைக்குள் தள்ளியுள்ளார்கள்.

தன்னால் எழுதப்பட்ட கள்ள உறுதி பிடிபட்டு விட்டதால் ரிசிகேசன் லோயரிடம் தான் கொடுத்த லட்சக்கணக்கான பணத்தை ஊமாசங்கர் திரும்பக் கேட்டும் ரிசிகேசன் லோயர் அதைக் கொடுக்காமல் அவனை எச்சரித்ததுடன் சிறைக்குள் அடைப்பேன் எனவும் வெருட்டித் துரத்தியுள்ளான்.

சமூகவலைத்தளத்தில் ஒருவரைப் பற்றி தவறாக பதிவு செய்திருந்தால் அல்லது பொய்யான முறையில் அவனை அவமானப்படுத்தியிருந்தாலும் அதற்காக விளக்கமறியலில் போடுவதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. இதற்கு சரியான உதாரணம் வைத்தியர் அர்ச்சுனா அவர்கள் பலரைப்பற்றி தொடர்ச்சியாக தனது முகநுாலில் கருத்து தெரிவித்திருந்தும் அவர் கைது செய்யப்படவில்லை. காரணம் எடுத்தவுடன் ஒருவன் முகநுாலில் கருத்து தெரிவிப்பதற்கு அவனை விளக்கமறியலில் அடைப்பதற்கு சட்டத்தில் எந்தவித பிரிவும் இல்லை.

இதே வேளை கள்ள உறுதி எழுதிய ரிசிகேசன் இனிவரும் காலங்களில் சரியான உறுதி எழுதினாலும் அவை கடும் சந்தேகத்துடன் கையாளப்படும் என்பதால் அவனிடம் உறுதிகள் எழுதுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு காணித்திணைக்கள உயர் அதிகாரத்தரப்புக்கள் தெரிவித்துள்ளார்கள்.

சட்டம் தமது சேட் பொக்கற்றுக்கள் இருப்பதாக நினைத்து நீதித்துறையை மிக மோசமாக ஏமாற்றி அப்பாவிகளை சிறைக்குள் தள்ளும் இவ்வாறான சட்டத்தரணிகள் தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுப்பது அவசியம்.

யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சிலர் பச்சைக் கள்ளர்களாக இருந்து கொண்டு தங்களை வானத்தில் இருந்து குதித்த தேவதைகள் என்ற நினைவில் உலா வருகின்றார்கள். கள்ள உறுதி எழுதிய ரிசிகேசன் லோயருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுப்பற்கும் அவனால் சிறைக்குச் சென்ற அப்பாவிக்கு நியாயத்தை மேல்முறையீட்டு நீதிமன்றில் பெற்றுக் கொடுப்பதற்கும் சட்டத்துறையைச் சேர்ந்து நேர்மைமிக்க ஒருவர் முன்வந்துள்ளார் எனவும் அதற்கான நிதிஉதவிகளை தான் மேற்கொள்வேன் எனவும் புலம்பெயர் தமிழன் ஒருவர் வம்பனு்ககு தெரிவித்துள்ளார். ஏனெனில் அந்த புலம்பெயர் தமிழனும் சட்டத்தரணி ஒருவரால் மிக மோசமாக கள்ள உறுதி எழுதி அதை அறியாமல் வாங்கி ஏமாந்தவர் எனவும். ஆகவே இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக உடனடியாக பாதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் அந்த அப்பாவியின் உறவினர்கள் தொர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவலி – [email protected]. அல்லது வம்பன் பேஸ்புக்கின் மெசேஜ்சர் ஊடாகவும் எம்மைத் தொடர்பு கொண்டால் நாம் குறித்த புலம்பெயர் தமிழனுடன் பாதிக்கப்பட்ட அப்பாவியின் உறவுகளை தொடர்பு ஏற்படுத்திவிடுவோம்.

யாழில் உமாசங்கருக்கு கள்ள உறுதி எழுதிய ரிதிகேசன் லோயர்!! – Vampan

யாழில் அப்பாவி ரிதிகேசன் லோயரை கேவலப்படுத்தியவர் சிறைக்குள்!! – Vampan