புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சிக் குளத்தில் மர்மமான முறையில் இளம் பெண்ணின் சடலம்! (Video)

கிளிநொச்சி அப்பாள் குளம் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாள் குளத்தில் குறித்த பெண்ணின் சடலம் கலை ஒதுங்கியுள்ளது.

குளக்கட்டினை அண்மித்து ஒதுங்கிய சடலம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் 30 வயது மதிக்க தக்கவர் என்பதுடன், பாதணிகள், கைப்பை ஆகியனவும் சடலத்துடன் காணப்படுகின்றது.

குறித்த பெண்ணின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் ஆரம்பித்துள்ளனர். சடலத்தை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டதன் பின்னர் மரண விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த பெண் வைத்திருந்த பையினை பார்வையிட்டபோது தேசிய அடையாள அட்டையில் ஆறுமுகம் திலகேஸ்வரி எனவும் குடும்ப அட்டையில் இல 84 உருத்திரபுரம் பகுதி எனவும் குறிப்பட்டிருந்தது. குறித்த பகுதி கிராம அலுவலரிடம் தொடர்பு கொண்டு குறித்த இலக்கத்தினை உடைய காணி உரிமையாளர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டார்.

குறித்த பெண் குறித்த வீட்டில் வாடகைக்கு இருப்பதாகவும் நேற்றைய தினம் மாலை வேளையில் வைத்தியசாலைக்கு சென்று வருவதாகவும் கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். அவரின் தொலைபேசி நேற்றில் இருந்து இயங்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

37 வயதான காமராஜ் திலகேஸ்வரி எனவும் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்ததாகவும் 3 வயது குழந்தை ஒன்றும் இருப்பதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பின்னர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தற்கொலையா அல்லது கொலையா? என்னும் கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்

May be an image of body of water

May be an image of nature and lakeMay be an image of outdoorsMay be an image of one or more people, people standing, body of water and treeMay be an image of 1 person