குண்டுத் தாக்குதலுடன் கைது செய்யப்பட்ட முக்கிய IS பயங்கரவாதிகளின் அதிர்ச்சி வாக்குமூலம்!! (video)!
“தற்கொலை செய்வதையோ அல்லது தற்கொலை தாக்குதல்களையோ இஸ்லாத் அனுமதிக்கவில்லை என்று கூறினாலும் அவர்களில் சிலர் தீவிர அடிப்படைவாதத்துடன் இருந்ததால் ஒன்றும் செய்ய முடியாமற் போனது..”
இவ்வாறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் சி.ஐ.டியினரிடம் வாக்குமூலம் வழங்கியபோது தெரிவித்ததாக பொலிஸ் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தன.
தேசிய தவ்ஹீத் ஜமாத் – அரசியல் பிரிவு மற்றும் இராணுவப்பிரிவு என்று இயங்கியதாகவும் அதில் இராணுவப்பிரிவு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தத் தீர்மானித்ததாகவும் கைதானோர் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் மேல்மட்டத்திடம் கூறியபோது அது கணக்கில் எடுக்கப்படவில்லை என்றும் தற்கொலை தாக்குதல் நடத்துவதை பெருமையாக சிலர் கருதினார்கள் என்றும் கைதான சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளதாக அறியமுடிந்தது .
தற்கொலைத் தாக்குதல்கள் குறித்து பல முக்கிய தகவல்களை வழங்கியுள்ள கைதானவர்கள் – ஆயுதங்கள் இருக்கும் இடங்கள் குறித்தும் முக்கியமான 4 நபர்கள் குறித்தும் தெரிவித்துள்ளனர்.
அதுபோல் இந்த தகவல்களின் பிரகாரம் தற்கொலை தாக்குதலுக்காக தெரிவுசெய்யப்பட்டவர்களென சந்தேகிக்கப்படும் 34 பேரை சந்தேகத்தில் கைது செய்துள்ள பொலிஸ் அவர்களிடம் இருந்தும் பல முக்கிய தகவல்களை பெற்றுள்ளது.
தற்கொலை தாக்குதலுக்கு முன்னர் முக்கியமான தற்கொலைதாரிகள் அனைவரும் சம்மாந்துறை வீடொன்றில் ஒன்றாக அமர்ந்து உணவருந்தியதாகவும் அதற்கு முன்னர் பெருமளவிலானோர் காத்தான்குடி வீடொன்றில் ஒன்றாக உணவருந்தியதாகவும் தெரியவந்துள்ளது.
தற்கொலைதாரிகளில் சிலர் இந்தியாவில் பயிற்சிகளை எடுக்க சென்றிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஒருவாரக் காலமாக நாட்டில் இடம்பெற்றுவந்த அசாதாரண நிலைமைக்கான முக்கிய சூத்திரதாரிகள்
காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் நடந்தேறிவரும், தீவிரவாத செயல்களில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்த, தற்கொலை
தாக்குதல் சூத்திரதாரிகளான, மொஹமட் சாஹித் அப்துல்ஹக், மொஹமட் ஷாஹிட் அப்துல்ஹக் ஆகிய
இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி இருவரையும் நாவலப்பிட்டியில் வைத்து, இன்று அதிகாலை 5.00 மணிளயவில் படையினர்
கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு மற்றும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என இராணுவத்தினரால் தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் கொழும்பு தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுடன் இவர்களுக்கு
நெருங்கிய தொடர்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் தாக்குதல் நடாத்துவதற்கு இவர்கள் முயன்றிருப்பதாக இவர்களின் வாக்குமூலத்திலிருந்து தெரியவருகின்றது.