கிளிநொச்சியில் கோயில் ஐயரின் கையை வெட்டி எறிந்த மருமகன்!! எதற்காக நடந்தது சண்டை??
கிளிநொச்சி கண்டாவளை கிராமத்தில் தனது மாமனின் கையை வெட்டி துண்டாக்கிய ஆலய பூசகரான மருமகன் தானும் நஞ்சருந்தியுள்ளார் என தெரியவருகின்றது.
இச்சம்பவம் இன்று (11) இரவு இடம்பெற்றுள்ளது.
காணி தகராறு காரணமாக தனது மாமனின் கையை மணிக் கட்டுக்கும் முழங் கைக்கும் இடையில் வெட்டித் துண்டாக்கிய மருமகனான ஆலய பூசகர், துண்டாக்கிய கையை வாய்க்காலுக்குள் வீசியுள்ளார்.
கை துண்டாடப்பட்ட நிலையில் 57 வயதான முதியவர் தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

