புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு வவுனிக்குளத்தினுள் குழந்தையுடன் பாய்ந்தது குட்டியின் வாகனம்!! (video)

வவுனிக்குளத்தினுள் வாகனம் பாய்ந்து விபத்து!
முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குளத்தினுள் வாகனம் ஒன்று மூவருடன் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சற்று முன்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனிக்குளம் செல்வபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த குட்டி என்பவருடைய மகேந்திரா ரக வாகனமே விபத்தில் சிக்கியிருக்கின்றது.
ஒரு மணி நேரத்தின் பின்னர் குளத்திலிருந்து ஒரு சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
2 வயது சிறுமியையும் தந்தையையும் தேடும் நடவடிக்கை தொடர்கிறது..
செல்வபுரம் வவுனிக்குளத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கப் ரக வாகனத்தில் பயணித்த நிலையில் தடம்புரண்டு குளத்தினுள் வீழ்ந்துள்ளனர்.
ஒரு மகன் உடனடியாகவே மீட்கப்பட்டார்..
மீதி முவரில் ஒரு சிறுவனே சற்று முன் மீட்கப்பட்டார்…

குறித்த வாகனத்தில் குடும்பத் தலைவர் ஒருவரும் அவருடைய பிள்ளைகள் மூவரும் பயணம் செய்துள்ள நிலையில் வாகனம் விபத்துக்குள்ளான நிலையில், வாகனத்தில் பயணம் செய்த சிறுவன் ஒருவன் வாகனத்தில் இருந்து வெளியே வந்து குளத்தில் நீந்தி கரை சேர்ந்துள்ளார்

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடற்படையினர் பொதுமக்கள் இணைந்து வாகனத்தை குளத்தில் இருந்து மீட்டு எடுத்த போது வாகனத்தில் இருந்து சிறுவன் ஒருவன் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இதனைவிட வாகனத்தின் உடைய சாரதியான கிருஸ்ணபிள்ளை ரசீந்திரன்(37) ,அவரது மகளாக ரசீந்திரன் சார்ஜனா (3) ஆகியோரை தேடும் நடவடிக்கையில் பொலீசார்,படையினர் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

விபத்தின் போது நீரில் மூழ்கிய ரவீந்திரகுமார் சஞ்சீவன் (13 ) என்ற சிறுவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மாங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Image may contain: one or more people, people sitting, ocean, outdoor and waterImage may contain: one or more people, ocean, swimming, outdoor and waterImage may contain: one or more people, ocean, sky, outdoor, nature and waterImage may contain: one or more people, ocean, swimming, outdoor and water