யாழில் நடக்கும் அலங்கோலங்கள்!! முன்னாள் கணவனிடம் தபாரிப்பு பணம் வாங்க கள்ளகாதலனுடன் நீதிமன்றம் வந்த பெண்!!
நேற்று யாழ் மல்லாகம் நீதிமன்றம் சென்றிருந்தேன்……!
வீட்டில் பூச்சாடியில் தண்ணீர் தேங்கியதால் சுகாதார அதிகாரியின் தண்டத்துக்கு ஆளாக நேரிட்டது. மழை காலமானதால் சிறிது கவனக்குறைவால் நீதிமன்றம் அழைத்திருந்தது.
அங்கு சென்றவேளை நான் கண்ட காட்சிகள் ஆச்சரியத்தையும் மிகுந்த வேதனையும் அடைந்தேன். சகல நீதிமன்ற நடவடிக்கைகளும் கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டன. இருந்தும் விவாகரத்து கோரியுள்ள பெண்களுக்கு தாபரிப்பு பணம் பெறுபவர்களின் பெயர்கள் மட்டும் அழைக்கப்பட்டன..
அங்கு நான் கண்ணுற்ற காட்சிகள் யாழ்ப்பாணம் எனும் கலாச்சார பூமியில் தான் வாழ்கிறோமா? என என்னை நானே கேட்டுகொண்டேன். சுமார் இருநூறுக்கு அதிகமாக பெண்கள் தபாரிப்பு பணம் பெறுவதை கண்டேன். அவர்களில் கணிசமானவர்கள் இருபது வயதை தொடாதவர்கள். மிகவும் வறுமைப்பட்ட சமூகம் சார்ந்தவர்கள்.
குறைந்த அளவு சமூகத்தில் அந்தஸ்தில் உள்ளவர்களும் அங்கு காணக்கூடியதாக இருந்தது. அவர்களில் பெரும்பாலும் இருபக்க குடும்ப மட்டத்தில் உள்ள பெரியவர்களின் நெருக்குதால் விவாகரத்து கோரியவர்கள் என்பதை நீதிமன்ற ஊழியர் மூலமாக அறியமுடிந்து.
இதில் காதலித்து கை குழந்தையுடன் கைவிட்டு சென்ற மைனர் குஞ்சுகளும் பணம் செலுத்துவதை கண்ணுற்றேன்.
அதைவிட வேடிக்கை சயிக்கிள் பாதுகாப்பு நிலையத்தில் முன்னாள் கணவரிடம் தபாரிப்பு பணம் பெற இந்நாள் காதலுடன் வந்த வனிதமங்கையையும் கண்டேன்.
அந்த வனிதை முன்நாள் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை செவிமடுத்தேன். தூய தமிழில் தூஷன வார்த்தைகளை அள்ளிவீசினாள் அந்த வனிதை..! முன்னாள் கணவர் அருகில் இருந்தவர்களிடம் கடந்த மூன்று வருடமாக இந்த பெண்ணுடன் எப்படி வாழ்ந்திருப்பேன் என எண்ணிப்பாருங்கள் என சிறு வார்த்தையோடு அவர் அங்கிருந்து விலகினார்.
முப்பதை தாண்டாத இளம் காரிகைகக்கு வயதுக்கு வந்த மகள்….! காரிகை எத்தனை வயதில் திருமணத்தில் இல்லை. கலவி ஆசை கொண்டு காரிகனை கை பிடித்திருப்பாள் என எண்ணி அதிர்ந்தே விட்டேன். காரிகன் மூவாயிரம் ஒவாவை மட்டுமே இம்முறை செலுத்தினான்.
காரணம் காரிகனுக்கு இன்னுமொரு குடும்பமாம்.
இதைவிட கொடுமை என்னவெனில் இருபதை தொடாதது ஒன்று நாற்பதை கடந்த காளையில் காதல் வயப்பட்டு கருத்தரித்தது.
அந்த காளைக்கு இது மூன்றாவதாம்.
ஏற்கனவே அக்கா தங்கையை கைபிடித்துள்ளாராம்.
இதுபோல் ஏராளமான கதைகள் உள்ளன
இதை தடுப்பதற்கு சமூக மட்டத்தில் கூடிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னேடுப்பது அவசியம். இங்கு தற்போது சமூக பிறள்வு என்பது பொருளாதார ஏற்ற தாழ்வின் ஊடாகவும் ஏற்படுகிறது.
நன்பர்களே இவற்றை தடுப்பதற்கு உங்கள் ஆலோசனைகளை முன்வையுங்கள்.
நன்றி
அன்புடன் வேல் ஸ்ரீரங்கன்.

