புதினங்களின் சங்கமம்

வடமராட்சியில் முருக்கங்காய் திருடர்கள் சையிக்கிளையும் விட்டு தப்பியோட்டம்

வடமராட்சியில் முருக்கங்காய் திருட முற்பட்டவர்கள் சையிக்களையும் விட்டு தப்யோடியுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு உடுப்பிட்டி இமையாணன் கிழக்கு செம்பாட்டு ஒழுங்கை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் முருங்கைத்தோட்டம் உள்ளது.

நேற்று இரவு முருங்கை தோட்டத்தில் திருடர்கள் உள்நுளைந்து முருக்கங்காய்களை திருடிக் கொண்டிருந்த போது தோட்ட உரிமையாளர் தோட்டத்தை கண்காணிக்க வந்த போது, திருடர்கள் தப்பியோடியுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு சையிக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.