எந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரர்களுடன் உறவு கொள்வது சிறந்தது??

ஞ்ச பூத தத்துவத்தை உள்ளடக்கிய ராசிக்காரர்களில் சில ராசிக்காரர்கள் சில ராசிக்காரர்களுடன் ஒத்துப்போவார்கள். சில ராசிக்காரர்கள் ஒத்துப்போக மாட்டார்கள். அப்படி சில ஜோடி பொருத்தங்களை பார்க்கலாம்.

மேஷம் – விருச்சிகம் :

செவ்வாய் ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் விருச்சிக ராசிக்காரர்கள் திருமணம் செய்தால் விரிசல் வரும். அதெப்படி இரண்டுமே செவ்வாய் ஆதிக்கம்தான் என்று கேட்கலாம். மேஷம் ராசி நெருப்பு குணம் கொண்ட ராசி. விருச்சிகம் நீர் ராசி. இவர்கள் இருவருக்கும் விட்டுக் கொடுக்கும் பண்பு இருக்காது. அதனால்தான் ஜோடி சேர்க்கும் போது மேஷத்துடன் விருச்சிகத்தை சேர்க்க வேண்டாம். நீர் ராசியான விருச்சிக ராசிக்காரர்கள் நில ராசிக்காரர்களுடன் இணையலாம்.

ரிஷபம் – விருச்சிகம் :

காதல் நாயகன் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்டவர் ரிஷபம் ராசிக்காரர்கள். ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு விருச்சிக ராசிகாரர்களுடன் திருமண வாழ்க்கை அமையும். ரிஷபம் நில ராசி, விருச்சிகம் நீர் ராசி எனவே நீரும் நிலமும் இணைந்து இல்லறத்தில் காதல் கெமிஸ்ட்ரி அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அன்போடு காதல் வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.

மிதுனம் – கடகம் :

புதனை ராசி அதிபதியாகக் கொண்டவர்கள் மிதுன ராசிக்காரர்கள். இவர்கள் தங்களுடைய துணையை அளவுக்கு அதிகமாக விரும்புவார்கள். மிதுன ராசிக்காரர்கள் மிகவும் பொறுமையானவர்கள். மிதுன ராசிக்காரர்களுக்கும் கடகம் ராசிக்காரர்களுக்கும் காதல் புரிந்துணர்வு அபரிமிதமாக இருக்கும்.

சிம்மம் – கன்னி :

சிம்மம் நெருப்பு ராசி. கன்னி நில ராசி இந்த ராசிக்காரர்களின் இல்வாழ்க்கை தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். நாளடைவில் சிம்மத்தின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், இருவருக்கும் இடையே உறவில் மன உளைச்சல் அதிகரித்து சண்டைகள் ஏற்படும்.

கன்னி – விருச்சிகம் :

கன்னி ராசி உள்ளவர்களுக்கு மகரம், விருச்சிகம் ராசி உள்ள வாழ்க்கை துணைகள் பொருத்தமாக இருப்பார்கள். கன்னி ராசி நில ராசி மகரம் ராசி நில ராசி, விருச்சிகம் நீர் ராசி. இவர்களுடைய வாரிசு அறிவாளியாக இருக்கும். கன்னிராசிக்காரர்களும் மிதுன ராசிக்காரர்களும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டால் சின்னச் சின்ன பிரச்சினை கூட பூதாகரமாக வெடிக்கும்.

துலாம் – மீனம் :

துலாம் காற்று ராசி, மீனம் நீர் ராசி இவர்கள் இணைந்தால் தினசரி போர்தான். பிரச்சினையை எப்படி கையாள்வது என்பதே இவர்களுக்குத் தெரியாததால், இவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்காது.

தனுசு – மகரம் :

தனுசு ராசிக்காரர்கள் தனது துணையை முழுவதுமாக நேசிப்பார்கள். இவர்களுக்கு காதல் திருமணம் மிகவும் சிறப்பாக அமையும். இந்த ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் தேடிக் கொள்வார்கள். ஆனால் இருவருக்கும் அன்பு குறைந்து போவதால், மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும். தனுசு ராசிக்காரர்கள் மகர ராசிக்காரர்களுடன் இணையக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)