தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த கம்பஹா மருத்துவருக்குக் கொரோனா!
கம்பஹா மாவட்ட பொது மருத்துவமனையில் கடமையாற்றிய மருத்துவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு சிகிச்சையளித்தன் பின்னணியிலேயே இவர் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுவதாக மருத்துவமனை பிரதிப் பணிப்பாளர் டாக்டர் பிரியந்த இலேபெரும தெரிவித்தார்.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த ஒரு குழுவினருக்கு தனது தனியார் மருத்துவமனையில் இந்த மருத்துவர் சிகிச்சை அளித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மருத்துவரை தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு (ஐ.டி.எச்) மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டாக்டர் பிரியந்த இலேபெரும தெரிவித்தார்.

