மன்னார் விடத்தல் தீவு கிராமத்துக்குள் கடல் புகுந்த காட்சிகள்!! (video)
வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார்
மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதோடு மன்னார் கடற் பிரதேசம் மிக
கொந்தளிப்பாக காணப்படுகிறது.
மேலும்
மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் உள்ள பல வீடுகளில் கடல் நீர்
உட்புகுந்துள்ளது. இதனால் அந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்
இன்று (02) காலை தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் அதிகரித்த காற்று மற்றும்
தொடர்ச்சியான மழை நீடித்து வரும் நிலையில் மக்கள் வீடுகளில்
முடங்கியுள்ளனர். இதனால் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில்
ஈடுபடுவதனைத் தவிர்த்துள்ளனர்.



