புதினங்களின் சங்கமம்

மீண்டும் பதற்றம்!! கொழும்பு பெற்றா பஸ் நிலையத்தில் குண்டுகள்!!

கொழும்பு புறக்கோட்டை பஸ்தியான் மாவத்தையில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தில் 87
டெட்டோனேற்றர் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சோதனை நடவடிக்கையின் போது இடம்பெற்றது.

மீன்பிடிக்குப் பயன்படுத்தப்படும் குறைந்தளவு அமுக்கத்தையுடைய இந்த வெடிமருந்துகள்
தாக்குதல் நடத்தும் நோக்கத்துக்காக பேருந்து நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டிருக்கலாம் எனப்
பொலிஸார் கூறினர்.