கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் நடாத்தியவர் தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளர்!!
கொழும்பு ஷங்கரி ல நட்சத்திர ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் இன்சான் சீலவன் என்ற தொழிற்சாலை உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது தொழிற்சாலையில்பணியாற்றும் 9 தொழிலாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு பொலிஸார் அறிவித்தனர்.
கொழும்பு, நீர்கொழும் மற்றும் மட்டக்களப்பு தேவாலயங்கள் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நேற்று பயங்கரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதல் ஷங்கரி ல நட்சத்திர ஹோட்டலிலும் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலை நடத்தியவரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கோட்டை நீதிவான்
நீதிமன்றுக்கு பொலிஸார் அறிவித்தனர்.
தொழிற்சாலை உரிமையாளரான இன்சான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது
தொழிற்சாலையில் பணியாற்றும் 9 தொழிலாளிகள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.