இன்றுமுதல் மின்வெட்டு இல்லை; இலங்கை மின்சார சபை அறிவிப்பு!
செயலிழந்திருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ள நிலையில் இன்று முதல் மின்வெட்டு ஏற்படாது என்று இலங்கை மின்சார சபைத் தலைவர் விஜித ஹேரத் த தெரிவித்துள்ளார்.
கரவபிட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகளின்போது அப்பகுதிக்குப் பொறுப்பான கண்காணிப்பாளரின் தவறு காரணமாகவே திங்களன்று நாடு தழுவிய ரீதியில் மின்தடை ஏற்பட்டது எனவும் அவா் கூறினார்.
திங்கட்கிழமை ஏற்பட்ட மின்தடையால் நாடு முழுவதும் குறைந்தது 7 மணித்தியாலங்கள் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
மின்தடையைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிக அழுத்தம் காரணமாக 900 மெகாவாட் மின் தேவையை நிறைவு செய்யும் நுரைச்சோலை அனல் மின் உற்றத்தி நிலையமும் செயலிழந்தது.
இதனையடுத்து சில நாட்களாக நாடு முழுவதும் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல் செய்யப்பட்டது.
எனினும் அனைத்துச் சிக்கல்களும் சீா் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றுமுதல் மின்தடை ஏற்படாது என இலங்கை மின்சார சபைத் தலைவர் விஜித ஹேரத் த தெரிவித்துள்ளார்.

