புதினங்களின் சங்கமம்

ஐயராக நடித்த முஸ்லீமிடம் 180 திருகோணமலைப் பெண்களின் புகைப்படங்கள்!!

மூதூர் கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயத்தில் பூசகருக்கு உதவியாளராக இருந்த,
தில்லாலங்கடி ஆசாமியின் கையடக்க தொலைபேசியில் கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த 180
பெண்களின் புகைப்படங்கள் இருந்துள்ளன. அத்துடன், அவரது அறையில் கருத்தடை மாத்திரை
அட்டைகள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயத்தின் பூசகருக்கு உதவியாக இருந்த சிவா என்ற நபர் 2
வருடங்களாக கடமையாற்றி வந்தார். அண்மையில் திருட்டு சம்பவம் ஒன்றையடுத்து, அவர்
கண்காணிக்கப்பட்டபோது, அவர் சிவா அல்ல, ஏறாவூரை சேர்ந்த புகாரி முகமது லாபீர் என்பது
தெரிய வந்தது. சிவா என்ற பெயருடன் கிளிவெட்டியில் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார்.

ஆலய பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலந்ததாக ஊர் மக்கள் கொடுத்த முறைப்பாட்டின்
அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.

மூதூர் பொலிசார் அவரது அறையை சோதனையிட்டபோது, கருத்தடை மாத்திரைகளின் 3 அட்டைகள்
மீட்கப்பட்டன. திருக்குர்ஆன், முஸ்லிம்கள் அணியும் தொப்பியும் அறையிலிருந்து மீட்கப்பட்டது.

அவரது கையடக்க தொலைபேசியை சோதனையிட்டபோது, கிளிவெட்டி மற்றும் அயல் கிராமங்களை
சேர்ந்த 180 பெண்களின் புகைப்படங்கள் சேமிக்கப்பட்டிருந்தன.

ஆலயத்திற்கு வரும் பெண்கள் பலருடன் நெருக்கமாக பழகி, பஞ்சாமிர்தத்தில் கருத்தடை
மாத்திரையை கலந்து கொடுத்தார் என குற்றம்சாட்டப்படுவது தொடர்பாகவும் பொலிசார் விசாரணை
செய்து வருகின்றனர்.

பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்டமைக்காக இவர் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தமிழ் பெண் உள்ளிட்ட மூன்று பெண்களை திருமணமும் செய்துள்ளார்.

தன்னை தனியார் துறை ஆசிரியராக அடையாளப்படுத்தி வந்த இவர், மாணவியொருவரை சீரழித்த
குற்றச்சாட்டையும் எதிர்கொண்டு வருகிறார்.