புதினங்களின் சங்கமம்

யாழ் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கின்றாராம்!! நடப்பது என்ன?

கொரோனொ வைரஸ் தொற்று நோய்க்கு சிகிச்சையளிக்க பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் ஒத்துழைக்க மறுப்பதால் கொரோனோ அபாயம் நீங்கும் வரை குறித்த அத்தியட்சகரை பணியில் இருந்த நீக்கி வேறு ஒருவரை புதிதாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் வைத்தியர் காண்டிபன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு-

அது மாத்திரமின்றி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஏனைய ஆளணியினரும் வைத்தியத்துறையில் கடமையாற்றி வருகின்றனர்.

எனினும் கவலைக்குரிய விடயமொன்று நடந்துவருகின்றது. முக்கியமான வைத்தியசாலைகளில் ஒன்றாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள் எமக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர்களின் அத்தியட்சகர் தம்முடன் சேர்ந்த செயலாற்றுவதற்கு ஒத்துழைக்கமாட்டார் என்று தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர்.

அவர் நோயாளிகள் உள்ளே வருகின்றபோது அவர்களை பகுத்தாய்ந்து – பிரித்தறிந்து நோயாளிகளை ஏற்று நடைமுறைப்படுத்த தன்னால் கஸ்ரம் என்று கூறியுள்ளார்.

எனவே அங்கு வருகின்ற நோயாளிகளை சரியான முறையில் பராமரிப்பதற்கு வைத்தியர்கள் மிகவும் கஸ்ரப்படுகிறார்கள். முக்கியமாக அஙகுள்ள வைத்தியர்கள் ஒரு குழு அமைத்து செயற்படுவதற்கும் அவர் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

எனினும், அவர்கள் குழுவை அமைத்து தமது திட்டத்தை முன்மொழிந்து அத்தியட்சகருக்கு தெரியப்படுத்தியபோதும் அவர் பல நிபந்தனைகளை விதித்தார் எனவும் – செய்ய முடியாது எனவும் கூறியிருக்கின்றார்.

இது சம்மந்தமாக நாங்கள் மாகாணப் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியுள்ளளோம். மாகாணப் பணிப்பாளர் அவருடைய ஆளணியுடன் சென்று பருத்தித்துறையில் ஒரு கூட்டத்தை ஏற்படுத்தியிருந்தார். எனினும், அந்தக் கூட்டத்தின் முடிவு இன்னும் தெளிவாகவில்லை.

குறித்த அத்தியட்சகர் இதற்கு முன்பும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இருந்த போது, பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. பல்வேறுபட்ட பிரச்சினைகளை வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கும் வைத்தியசாலைக்கும் ஏற்படுத்தியிருந்தார்.

இவ்வாறு பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக மாகாணப் பணிப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சுக்கு அனுப்பபட்டுள்ளது.

ஆனாலும் அவருக்கு எதிராக இதுவரையில் எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த கொரோனோ தொற்று நோய் தடுக்க வேண்டிய நேரத்தில் – மக்களுக்கு பரவுகின்ற போது இப்படிப்பட்ட அத்தியட்சகர் இருப்பது எமக்கு மிக வேதனை அளிக்கின்றது.

இப்படியான அத்தியட்சகருடன் தொடர்ந்து வேலையாற்ற முடியாது என அங்குள்ள வைத்தியர்கள் எமக்குக் கடிதம் மூலம் தெரியப்படுதியுள்ளார். அதனை நாங்கள் ஏற்று எங்கள் கொழும்பு நிறைவேற்றுக் கூட்டத்தில் அவரை தற்காலிகமாக பணியில் இருந்து நீக்கி கொரோனொ நீங்கும் வரை வேறொரு சிறந்த வைத்திய அத்தியட்சகரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நியமிக்குமாறு கேட்டள்ளோம்.

இதற்கமையவாக எமது செயலாளர் இன்று (நேற்று 08) அந்தக் கடிதத்தை சுகாதார பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பியுள்ளார். சுகாதார அமைச்சு விரைந்து எமக்கு ஒரு முடிவைத் தருமென்று நம்புகின்றோம். மாகாணப் பணிப்பாளர் ஆளுநருடன் கலந்தாலேசித்துள்ளார். அவர்களும் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள்.

எனவே, விரைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர் நியமிக்கப்படுவாரென்று நம்புகின்றோம். ஏனைய வைத்தியசாலைப் பணிப்பாளர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதால் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.