புதினங்களின் சங்கமம்

யாழில் நாடிக்கு மாஸ்க் அணிந்தவருக்கு நடந்த அலங்கோலம்!!

யாழில் மூக்குக்கு அணியவேண்டிய மாஸ்கை நாடிக்கு அணிந்த நபர் ஒருவர் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

மருதனார்மடம் உப கொத்தணி உருவாகியுள்ள நிலையில் யாழ் சாவகச்சேரி சந்தையில் நபர் ஒருவர் நாடிக்கு மாஸ் அணிந்தவாறு சென்றுள்ளார்.

இதனை அவதானித்த சாவகச்சேரிப் பொலிஸார் உடனடியாக குறித்த நபரை வழி மறித்து கைதுசெய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

நாட்டில் தீவிரமாக கொத்தணிகள் உருவாகிவரும் நிலையில் பொலிஸார் இதுபோன்ற கடும் நடவடிக்கைகளை கடைப்பிடித்து நோய் ஆபத்தை தணிக்கும்வகையில் செயற்படுவதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.