புதினங்களின் சங்கமம்

வடக்கு மாகாணத்தில் பற் சிகிச்சைக்கு செல்பவர்களுக்கு கடும் எச்சரிச்கை!!

அவசர தேவையுடையவர்கள் மாத்திரமே பல்வைத்திய சேவைகளிற்கு செல்லுமாறு வடக்குமாகாண பல்வைத்தியசங்கத்தின் தலைவர் எம்.உதயகுமார் பொதுமக்களிடம் வேண்டும் விடுத்துள்ளார்.

வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பற்சிகிச்சைக்கு செல்லும் வடமாகாண மக்களின் பாதுகாப்பு கருதி சில வேண்டுகோளை நாம் முன்வைக்கின்றோம்.

தற்போது நாடு இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாலும் கோவிட்19 தாக்கம் சமூகத்தில் பரவக்கூடிய வாய்ப்புகள் முற்றாக மறைந்துவிடவில்லை.

.எனவே பல், வாய் தொடர்பான சிகிச்சைக்கள் தேவைப்படுபவர்கள் அவசியம் இருந்தால் மாத்திரமே வைத்தியசாலைகளிற்கு செல்லவேண்டும். குறிப்பாக பல் முகங்களில் ஏற்படும் விபத்து, அல்லது காயங்கள் என்பவற்றிற்கு மாத்திரம் சிகிச்சை பெறுவதற்கு செல்வதுடன்ஏனைய செயற்பாடுகளை நிலமை சீரடைந்த பின்னர் நீங்கள் பெற்றுகொள்ளமுடியும்.

ஏனெனில் வாயில் இருக்கும் எச்சிலிலிருந்து கிருமிபரவக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது. எனவே குறித்த விடயத்தில் கவனம் எடுத்து எம்மையும் சமூகத்தையும் நாம் பாதுகாக்கவேண்டும்.

பற்சிகிச்சைக்கு செல்வோர் பொதுப்போக்குவரத்தை தவிர்த்து தனியாகசெல்லவேண்டும்.அத்துடன் வேறுஒருவரை அல்லது குழந்தைகளை உதவிக்கு அழைத்துசெல்வதையும் தவிர்க்கவேண்டும்.

வைத்தியசாலைகளிற்கு செல்லும்போது கைகளை சுத்தம்செய்வதுடன் காத்திருப்போர் பகுதியில் அமர்ந்திருக்கும் போது சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும்.அத்துடன் வைத்தியரின் மேசைகள் கதவுகள் போன்றவற்றை தொடுவதை தவிர்க்கவேண்டும்.

அத்துடன் முககவசங்களை களற்றும்போது அதனை பிரத்தியேக இடத்தில்வைத்துவிட்டு சிகிச்சை முடிந்தபின்னர் எடுத்துசெல்லவேண்டும்.அத்துடன் பல்வாய் போன்றவற்றை தொடுவதையும் தவிர்க்கவேண்டும்.பல்பிடுங்கிய பின்னர் வெளியில் வந்து எச்சில் துப்புவதை தவிர்ப்பதுடன் வைரஸ்பரவல் கட்டுப்பாட்டிற்கு வரும் வரைக்கும் அனைத்து பொதுமக்களும் அதனை கடைப்பிடிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

அத்துடன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக தகுதியற்ற பல்வைத்தியர்கள் இருக்கிறார்கள். எனவே மக்கள் அங்குசெல்வதை தவிர்க்கவேண்டும்.அங்கு செல்லும் போது அந்தவைத்தியர் தொடர்பான உறுதிப்பாட்டையும், கல்விதகுதியையும் அறிந்தபின்னர் செல்லுமாறு பொதுமக்களை கேட்டுகொள்கின்றோம். – என்றார்.