புதினங்களின் சங்கமம்

12 மணித்தியாலங்களில் பலத்த சூறாவளி அபாயம்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த சூறாவளியான FANI (போனி) 2019 ஏப்ரல் 28 ஆம் திகதி பிற்பகல் 11.30 மணிக்கு வட அகலாங்கு 8.4N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 86.9 E இற்கும் அருகில் மட்டக்களப்பிற்குக் கிழக்காக ஏறத்தாழ 580 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு பலத்த சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதி மே 1 ஆம் திகதி வரை வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்குக் கரையை விட்டு விலகி நகரக் கூடுவதுடன் அதன் பின் மீண்டும் படிப்படியாகத் திரும்பி வடகிழக்கு திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இன்றும் நாளையும் நாடு முழுவதும் பலமான காற்றுடன் கூடிய நிலைமை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, தென், மேல், மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில்100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் எதிர்காலத்தில் தொடர்ந்து வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

இதேவேளை, கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் எதிர்காலத்தில் தொடர்ந்து வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.