ஓ.எல் பரீட்சை 2 தடவைகள் எடுத்த இரசாயணவியல் ஆசிரியர் சுபீசனின் கதை இது!!
O/L பெறுபேறுகளா A/L பெறுபேறுகளை தீர்மானிக்கின்றன..???
எனது O/L பெறுபேறுகள்
1 ஆம் தடவை AB 4C S 2W. Math- C , Sci- S
2 ஆம் தடவை 2A 3C 2S 2W. Math- A , Sci- S
முதலாம் முறை Results வந்தபின்பு தான் A/L பற்றியே தெரிய வந்திச்சு, maths, bio, art, com பிரிவுகள் இருப்பதை ஓர் ஆசிரியர் சொல்லி அப்போ தான் அறிந்து கொண்டேன்.
அவருடைய கதையிலிருந்து Maths & bio பெரிய படிப்பென தோணிச்சு.. maths பிடிக்கும் O/L maths வேறு A/L maths வேறு இங்கு Chem & phy இருக்கு என்பதை அறியாமல் முடிவெடுத்தாச்சு.
நான் படித்த பள்ளி 1955 இல் ஆரம்பிக்கப் பட்டது. அங்கிருந்து A/L Maths படிக்கும் முதலாவது மாணவன் நான் தான்.. அங்கு A/L இல்லை இதனால் அனுமதிக்காக J/Union College சென்றபோது Maths இற்கு A இல்லையென அனுமதி மறுக்கப்பட்டது.
தொடர்ந்து J/Vayavilan C.C சென்றபோது “புள்ளிகள் குறையின் பாடம் மாற வேண்டும்” எனும் நிபந்தனையுடன் அனுமதி கிடைத்தது.
சக மாணவர்கள் December இல் இருந்தே Science hall இல் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பித்து விட்டனர். அதுவரை ஒன்றும் அறியாத என்னால் அவர்களுடன் பள்ளி படிப்பை தொடர முடியவில்லை. முதல் இரு நாட்களில் ஒன்றுமே விளங்காத நிலையில் Maths கஷ்டம் எனும் முடிவெடுத்து கலைத்துறைக்குள் பிரவேசித்தேன்.
அங்குள்ள சிலர் “A எடுத்த நாங்களே maths கஷ்டம்னு தான் போகலை இவர் C ஓட போறார்” என்றனர். இது அடுத்த நாளும் நிகழ்ந்ததால் அவமானத்தில் மறுபடியும் Maths இற்கு திரும்பி போகமுடியாத நிலையில் 3 ஆம் நாள் பள்ளியிலிருந்து விலகியாச்சு.
வீட்டில் கஷ்டம் இனி படிச்சா தான் சிறப்பான எதிர்காலம். வேறு வழியில்லை என முதலே உணர்ந்தாச்சு. எனவே மீண்டும் முயற்சிக்க O/L maths இற்கு மட்டும் Repeat class போய் A எடுத்தது. அப்போ கூட தெரியாது Science Pass பண்ண வேணும்னு. ஆனால் கடவுள் புண்ணியத்தில Science S வந்திடிச்சு.
அனுமதி கேட்டு J/VCC சென்றபோது Science S காரணமா மீண்டும் அதே நிபந்தனையுடன் அனுமதி கிடைத்தது. அப்புறம் இஞ்ஞினியர் என்றால் மரியாதை கிடைக்கும்னு A/L இல் போராடி…. முதலாம் தடவை CFF
இரண்டாம் தடவை ACS
மூன்றாம் தடவை ABC
முடிவில் இஞ்ஞினியர் ஆகவில்லை ஆனாலும் எதிர்பார்த்த மரியாதை கிடைச்சதால இந்த வாழ்கை பிடிச்சிருக்கு.
O/L science S
A/L chemistry A
எனது சொந்த அனுபவத்தில் கிடைத்த முடிவு.. O/L இற்கு 9A, 8A என்றோ, maths & science இற்கு A என்றோ ஒன்றும் அவசியம் இல்லை. O/L results எதுவாயினும் ஆர்வமும் முயற்சியும் உடைய அனைவரும் A/L இல் Best results எடுக்க முடியும்.
maths தான் பிடிக்கும் Science பிடிக்காது. ஆனாலும் Dias sir மேல் இருந்த அதிகளவு மரியாதையால் Chemistry இல் ஆர்வம் ஏற்பட்டு A எடுக்க முடிந்தது.
என்னை பொறுத்த வரையில் A/L சுலபம்.
நானே இந்தளவுக்கு வந்திருக்கன் என்றால் என்னை விட O/L results அதிகமா எடுத்தவங்க நிச்சயமாக. Medicine & Engineering போகலாம். பாடம் கஷ்டம் உங்களால் படிக்க முடியாதினு சொல்றவங்களுக்கு நாம சாதிச்சு காட்டனும்னு மனசுக்க நினைச்சிட்டு நம்பிக்கையோடு படியுங்க..




