யாழ்ப்பாணப் பெடியல், பெட்டைகள் செய்யும் அலங்கோலங்கள்!! செந்தில்குமரன் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்!!
யாழ்ப்பாணத்தில கடந்த பத்து ஆண்டுகளில் நான் பொதுவாக அவதானித்தவை.
* கஞ்சா நல்லா அடிக்கலாம்
* கலியாணவீடு, செத்தவீடு, பிறந்த நாள், என்ன கொண்டாட்டம் எண்டாலும் குடும்பம் உறவுகள் அயலவன் முன்னாலயே கூட்டமா தண்ணீ அடிக்கலாம்… கேட்டா அப்படி பண்ணாட்டி இந்த காலத்தில மதிக்கமாட்டார்களாம் கதை வேற..
* வாத்தியார் குழப்படி செய்தால் இப்ப அடிக்ககூடாது….
* பொடியள் நல்லா வாழ் சுத்தணுமாம்… அப்புறம் சம்பவம் செய்யணுமாம்.. அப்பதான் சிலர் ஆம்பளயாம்…கீரோவாம்….
* பெரும்பாலான மாணவர்களுக்கு சிமார்ட் போன் வேணுமாம்.. படிக்க இல்ல.. பேஸ்புக்ல மூஞ்சய அங்க சூப்பி இங்க சொருகி படம் போடவும்..பலானா படம் பாக்கவும்
* மீச அரும்பிச்சா இல்லயா 200ccபைக் வேணும்… வீட்ட அடுத்த வேளை கஞ்சி இருக்கோ தெரியல… இது நேரத்தயோ பயணத்தயோ இலகுபடுத்த இல்லை.. வழியால ஒழுகாக போறவன குழப்பவும்… குட்டிகளை சைட் அடிக்கவும்…
* வீடுகள் தோறும் Tv.. cable tv.. tele drama… அப்புறம் எங்க அம்மாக்கள் புள்ளயளின்ர படிப்ப பாக்கிறாங்க….
* வெளிநாட்டில இருந்தது விடுமுறையில வாற நம்ம உறவுக்காரன்க என்ன கொண்டுவாறானோ இல்லயோ இப்ப சொந்தம் கொண்டாட முழுப் போத்தலோட தானே வாறானுகள்.. பிறகன்ன.. பிஞ்சு என்ன பூ என்ன…
* இப்ப பெரும்பாலான பிள்ளைகள் படிக்குதோ இல்லையோ எல்லாத்துக்கும் ரீயுசன்…
அதுவும் ஒன்றிலை மூன்று நாலு… பிள்ளை ஏதோ எல்லாத்துக்கும் போகுது ஆனால் அதுக்கு சிந்தித்துப் படிக்க நேரமில்லை…
* இன்னும் சில இடத்தில நம்ம சைவக் கோயில் காரங்க திருவிழா… கூள்…கஞ்சி எண்டு இப்ப குழல் கட்டினா அப்புறம் ஒருமாதத்திற்கு அவுக்க மாட்டாங்கள்…காது கடைஞ்சுதான் அவுப்பானுக… சில இடங்களில் வீடுகளே அப்பிடி தான்..
* பல இடத்தில பெற்றாருக்கு பிள்ளை எண்டா பயம்… கதைச்சா அதை செய்வான் இதைச் செய்வான்..
*இப்ப படிப்ப விட மிச்ச எல்லாத்தயும் வடக்கில தாராளமா செய்யலாம்…
அதாவது சாராயம் தாராளம்… கஞ்சா தாராளம்…. ரூம் போடலாம் தாராளம்… யாரயும் யாரும் அடிக்கலாம் வெட்டலாம் கடத்தலாம் ஆனால் ஆசிரியர்கள் மட்டும் மாணன் தப்பு பண்ணினாலும் தொடக்கூடாது கேட்ககூடாது…
அப்புறம் எங்கடா நீங்கள் எல்லா கல்வியில் தன்னிறைவு காண்கிறது… சிங்களவன பேர்சன்ரேச்ல முந்துறது….
இதில நான் சொன்ன கெட்டதுகள் எல்லாத்தயும் விட்டுவிட்டு சிந்தியுங்கடா….
நம்ம தமிழினத்தை கல்வியால் மட்டுமே இனி நிமிர செய்ய முடியும்… எந்த அரசியலாலோ அல்லது வேறு எவனது பணத்தாலோ சலுகைகளாலோ அல்ல…. தேசியத் தலைவரின் சிந்தனையும் அதுவே….
copy by senthilkumaran kanthaiya

