ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் யாழை வந்தடைந்தார்.! Video
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.
அத்துடன், இன்று திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினருடனும், பிரமுகர்களுடனும் கலந்துரையாடினார்.
அதன் பின்னரே தற்போது யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி கடந்த மூன்று நாட்களாக ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்று வரும் அணையா விளக்குப் போராட்டம் தொடர்பிலும் அங்கு சென்று கலந்துரையாடலில் ஈடுபடுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

