புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

என்னால் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றவில்லை!! லங்காசிறியில் காசு கொடுத்து சுவிஸ்பாதர் பிரச்சாரம்!!(Video)

 

சுவிஸ் போதகரான சற்குணம் லங்காசிறியின் தற்போதயை முதலாளி பாஸ்கரனுடன் தொடர்பு கொண்டு நடந்த பேரம் பேசலில் 80 லட்சங்கள் கோடிகள் பரிமாறப்பட்டு லங்காசிறி சுவிஸ் போதகரின் வீடியோவை தனது இணையத்தளத்தில் வெளியிட்டு கேவலம் புரிந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது. ஐ.பி.சி மற்றும் லங்கா சிறி இணைய ஊடகங்களுக்கு பாஸ்கரனே முதலாளியாவான்…. எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  உதயன் பத்திரிகை இந்த போதகரது விளம்பரத்தைப் போட்டு வெளியிட்டதிலும் பார்க்க பாஸ்கரனது மிகக் கேவலமான செயற்பாட்டை செய்துள்ளான்.

இதே வேளை யாழ் போதனாவைத்தியசாலையின் உயரதிகாரிகள் பலரும் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த பலரும் சுமந்திரனும் பாஸ்கரனுடன் மிக நெருங்கிய ஈடுபாட்டில் இருப்பதான சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது..

தமிழர்களின் இருப்பை அழிப்பதில் சில புல்லுருவிகள் செயற்பட்டு வருகின்றார்கள். அவர்களில் ஒருவனான பாஸ்கரன் முன்னிற்பது பலரும் அறியாத ஒன்று என பல சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

ஊடகம் என்றால் நியாயமான கேள்விகளைக் குறித்த பாதரிடம் கேட்டு மக்களுக்கு சந்தேகத்தை நீக்க வேண்டியது முக்கியம். ஆனால் சுவிஸ் போதகர் இவ்வாறான பச்சைப் பொய்கள் சொல்வதை பாஸ்கரனின் இணையத்தளம் அப்படியே வெளியிட்டு யாழ்ப்பாண மக்களை முட்டாள்களாக்கியுள்ளது.

குறித்த பாதர் வெளியிட்ட தகவல்களை அப்படியே தந்துள்ளோம்.

 

யாழில் கொரோனா பரவ தான் காரணம் இல்லை என யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவ காரணம் என கூறப்படும் சுவிஸ் போதகர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில்,

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இலங்கை தேசத்திற்கு நானும் எனது சபையாரும் அநேக தரம் வந்து போகின்றோம். அதற்கு காரணம் என்னவென்றால் நானும் எனது சபையார் யாவரும் இலங்கை தேசத்தையும் இலங்கை மக்களையும் அதிகமாக நேசிக்கின்றோம்.

அதிகமாக உபவாசத்தோடு கூட சபை மக்களாய் சேர்ந்து இலங்கைக்காக இலங்கை மக்களுக்காக பிரார்த்தனைகளை முன்னெடுத்திருக்கிறோம். அதேபோல தான் கடந்த மார்ச் மாதம் பத்தாம் திகதி கொழும்பு விமான நிலையத்தில் நானும், என்னுடைய மனைவியுமாக வந்து இறங்கினோம்.

வியாதிகளை கண்டறியும் கருவிகள் ஊடாக நாம் சென்றோம். எங்களுக்கு ஒரு வியாதியும் அங்கே இருக்கவில்லை. நாங்கள் வந்த காரியங்களை சீக்கிரமாக முடித்துக் கொண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கே எல்லா வழிப்பாட்டு தலங்களிலும் வழிபாடுகள் நடந்தன.

அதேபோல் எங்களுடைய சபையிலும் வழிபாடுகளை நாங்கள் நடத்தினோம். அங்கே எல்லாரும் வரவில்லை. அருகிலிருந்த குறிப்பிட்ட சிலரே வந்திருந்தனர்.

நாங்கள் எங்களுடைய ஆராதனையை எந்த செய்தி தாளிலும் விளம்பரம் செய்யவில்லை. சாதாரணமாய் ஆராதனை நடத்தினோம். சீக்கிரமாக ஆராதனையை முடித்து விட்டு சீக்கிரமாக அனைவரையும் அனுப்பி விட்டு நான் கொழும்புக்கு கிளம்பி விட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ள விடயம் காணொளியில்,