புதினங்களின் சங்கமம்

யாழில் துயரம்!! பட்டம் ஏற்றி விளையாடிய சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து சாவு!!

பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார் என்று மந்திகை மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.

பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த ஜெகன் ஆனந்த் (வயது -17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

இன்று மாலை பட்டம் ஏற்றி விளையாடிய சிறுவன் தோட்டக் கிணறில் தவறி வீழ்ந்துள்ளார். அவரை இரவு 7 மணியாகியும் காணவில்லை என உறவினர்கள் தேடியுள்ளனர். இரவு 7.30 மணியளவில் சிறுவனை கிணற்றிலிருந்து சடலமாக மீட்ட உறவினர்கள் மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.