யாழ் மறுவன்புல காற்று மின் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் மீது பெண்கள் தாக்குதல்!! (Video)

யாழ்.சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் மின் காற்றாலை அமைக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டமைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம் அடிதடியில் முடிந்துள்ளது.

மறவன்புலவில் மக்கள் குடியிருப்புப் பகுதிக்கருகில் மின் காற்றாலை அமைக்கப்படுவதாக மக்கள் போராட்டங்கள் பலவற்றை மேற்கொண்டதையடுத்து அதனை ஆராய்வதற்காக பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

அதற்கிடையில், மின் காற்றாலை அமைக்கும் பணிக்கான உபகரணங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனரக வாகனங்களில் கொண்டுவரப்பட்டிருந்ததோடு, மின் காற்றாலைக்கான அலுவலகம் அமைக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுஇந்நிலையில் அதற்கு எதிராக மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதோடு, பணிகளை இடைநிறுத்துமாறும் கோரினர்.

இதன்போது இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதோடு, ஆயுதங்களாலும் தாக்கிக்கொண்டனர்.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த சாவகச்சேரிப் பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததோடு, பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர்.

Image may contain: 1 person, standing and outdoor Image may contain: one or more people, people standing and outdoor

error

Enjoy this blog? Please spread the word :)