வற்றாப்பளை கண்ணகி அம்மனையும் வில்லங்கத்தில் மாட்டிவிட கொரோனா ஆயத்தமாகின்றது!!
விஜயகலாவின் செயற்பாட்டாளரான விஜிமருகன் என்பவரது முகப்புத்தகத்தில் பரப்பப்பட்ட தகவல் கண்டபடி எல்லா இடங்களிலும் பரவுகின்றது. இந்தச் செய்தியால் வற்றாப்பளை அம்மன் மற்றும் அந்த ஆலயக் குருக்களுக்கு சிக்கல் ஏற்படும் என தெரியவருகின்றது. கொரோனா தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத போலி தகவல்களையும் மருத்துவங்களையும் பரப்புபவர்கள் மீது பொலிசார் சட்டநடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள்.
சமூகவலைத்தளங்களில் பரவும் போலியான தகவல் இதோ…… இது திட்டமிட்டு இன்னொரு மதப் பிரிவால் பரப்பப்படுவதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.
#வற்றாப்பளை_கண்ணகி_அம்மாவின்_புதுமை
ஆலய குருக்களின் கனவில் சென்று கூறிய புதுமை 🙏அரிசிமா🙏மஞ்சள்மா🙏போன்றவற்றினை(தூய்மையான நீரினை)இட்டு இறுக குழைத்து 🙏சிட்டி போன்ற வடிவத்தில் அமைத்து 🙏வீட்டின் முற்பகுதியில் அவ்வாறு அமைக்கப்பட்ட சிட்டி விளக்கினை வைத்து விளக்கேற்ரவும்🙏பின்னர் அந்த விளக்கு அணைந்த(எரிந்த முடிந்த பின்னர்)அந்த சிட்டி விளக்கினை ஒரு தூய்மையான பாத்திரத்தில் வைத்து தூய்மையான நீரினை விட்டு குழைத்து எமது வீட்டினுள் தெளிக்க வேண்டும்
உலகத்தின் அசதாரண சூழ்நிலையில் எமது தாயார் எங்களின் பாதுகாப்புக்கு எமது குருக்களின் கனவில் சென்று கூறிய புதுமை
🙏🙏அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் 🙏🙏