புதினங்களின் சங்கமம்

யாழிலிருந்து கொழும்பு சென்ற ரயில் மோதி கோர விபத்து! ஒருவர் பலி!! பற்றி எரிந்த கார்!!(Photos)

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த உத்தரதேவி கடுகதி ரயிலுடன் காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று நண்பகல் வனவாசலைப் பகுதியில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது சில மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு கார் தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை அப்பகுதி மக்கள் இணைந்து தீயினை அணைத்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், இந்த சம்பவத்தால் ரயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் மதியம் 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தை தொடர்ந்து கார் தீப்பிடித்து எரிந்ததுடன் அதில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வத்தளை ஹுனுப்பிட்டிய கந்தகே மாவத்தையைச் சேர்ந்த பிரியந்த பெர்னாண்டோ (55) என்பவரே உயிரிழந்தவராவார்.

புகையிரதத்தில் மோதிய கார், சுமார் 200 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று தீப்பிடித்தது.புகையிரதத்தின் முன்பகுதியும் தீப்பிடித்து எரிந்ததையடுத்து, அப்பகுதி மக்கள் இணைந்து அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.