Vampan memesபுதினங்களின் சங்கமம்

கொரோனாவை நேரடியாக பேட்டி எடுத்த யாழ்ப்பாண குடும்பஸ்தர்!! இதோ பேட்டி!!

கொரோனா வைரசை பேட்டி எடுத்ததாக தெரிவித்து தனது முகப்புத்தகத்தில் யாழ்ப்பாண குடும்பஸ்தரான

Vasantharuban Thanapalasingam  பதிவிட்ட பதிவை அப்படியே இங்கு தந்துள்ளோம்…..

 

கௌரவ, மாண்புமிகு, திருநிறை செல்வம் கொரோனாவுடன் நேரடி பேட்டி!!!

குறிப்பு – தனபாலசிங்கம் வசந்தரூபன் ஆகிய நான் தற்போதய கொரோனா ஊடரங்கு நிலையில் வீட்டில் சும்மா இருக்க போர் அடித்த காரணத்தால் பகிடியாக இவ்வாறான ஒரு பதிவை எனது சொந்த பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளேன். நான் உண்மை சொன்னாலே ஒருத்தரும் நம்பமாட்டாங்கள்…. ஆகவே இதை எல்லோரும் நம்புவாங்கள் என்று நினைத்து இதனை சீரியசாக எடுத்து ‘சமூகவலைத்தளத்தில் புரளியை கிளப்பிய காரணத்தால் கைது‘ என தெரிவித்து என்னை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என சம்மந்தப்பட்டவர்களிடம் பணிவாகவும் தாழ்மையாகவும் கேட்டுக் கொள்கின்றேன்.

1) கே – வணக்கம் கௌரவ, மாண்புமிகு, திறைசெல்வம் கொரோனா அவர்களே….. தங்களைப் பற்றி எமது மக்கள் அறியும்படியாக சிலவற்றை கேட்க விரும்புகின்றேன். பதில் கூறுவீர்களா???

ப – முதலில் என்னை இவ்வாறு லுாசுத்தனமாக கௌரவ பட்டங்கள் வைத்து கூப்பிட வேண்டாம். நான் அரசியல்வாதியல்ல… நான் செயற்பாட்டாளன்…அவர்களைப் போல் உந்தப் பட்டங்கள் வைத்து கூப்பிடுவதால்தான் எனக்கு பெருமை என்று நினைக்க மாட்டேன். நான் செய்யும் செயல்களாலேயே நான் என்னை பெருமையாக கருதுகின்றேன்.

2) கே – அப்படியல்ல கொரோனா அவர்களே… நீங்கள் கடவுளுக்கும் மேலானாவர்… கடவுள்களே உங்களைக் கண்டு தங்கள் இருப்பிடங்களை மூடிவிட்டு பதுங்கியிருக்கின்றார்கள். அதனாலேயே அப்படி கூறினேன்.

ப – கடவுள்கள் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது. அதனால் கடவுள்களுக்கு இந்த நிலை. ஆனால் நான் மனிதனால் உருவாக்கப்படவில்லை….

3) கே – இது ஒரு உயிரியல் யுத்தம் என்றும் அமெரிக்க பொருளாதாரத்தை சிதைக்க சீனா உருவாக்கிய வைரஸ் எனவும் சீன பொருளாதாரத்தை சிதைக்க அமெரிக்க உருவாக்கிய வைரஸ் எனவும் பலர் கூறுகின்றார்களே அது உண்மையா??

ப – இவ்வாறு கூறுபவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா, இலங்கை, வேறு நாடுகளில் இருக்கும் தங்களை பெரும் ஆய்வாளர்கள் என கூறும் தமிழ் ஆய்வாளர்களும், ஒரு சில வேற்று மொழிக்கார ஆய்வாளர்களுமே. ஏனெனில் அவர்கள் எப்போதும் அப்படியான சிந்தனையிலேயே வாழ்கின்றார்கள். அத்துடன் தாங்கள் சொல்வது எல்லாம் சரி என நினைத்துக் கொண்டு இவ்வாறான அறிக்கைகளை விட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகின்றேன்….
கனடா பிரதமரின் மனைவிக்கு நான் தொற்றியமைக்கு காரணமும் சீனாவா??? அப்படி இருந்தால் கனடா பிரமரின் மனைவி சீனாக்காரன் யாருடனாவது தொடர்பில் இருந்தாரா?? அவர் இங்கிலாந்து சென்று திரும்பிய பின்னரே தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். சீனாவில் மட்டுமல்ல பல நாடுகளில் ஒரே ரேநத்தில் நான் உருவாகியுள்ளேன். ஆனால் சீனாவே என்னை முதலில் அடையாளம் கண்டது. மற்றைய நாடுகள் என்னை சாதாரண ஒரு நோய் அறிகுறி வைரஸ் என நினைத்து சிகிச்சை செய்து வந்தார்கள்.

4) கே. அப்போ நீங்கள் தானாகவே உருவாகினீர்களா?? பாம்பில் இருந்து உருவாகினீர்கள் என்றும், எறும்புண்ணியிலிருந்து உருவாகினீர்கள் என்றும் கூறுகின்றார்களே… அது உண்மையா??

ப – மனிதனை உருவாக்கியது யார்? விலங்குகளை உருவாக்கியது யார்? இதற்கு உமக்கு பதில் தெரியுமா? எனக்கு இதயமில்லை, இரத்தமில்லை, நரம்பு இல்லை.. தோல் இல்லை, தசை இல்லை, ஏன் மூளைகூட இல்லை. ஆனால் உயிருள்ளவற்றில் இருக்கும் டீ.என்.ஏ, புரதம், கொழுப்பு ஆகிய கூறுகள் என்னில் இருப்பதால் நான் அரை உயிரி ஆக உள்ளேன். என்னைப் போன்ற பல இனத்தவர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் அண்டம் எல்லாம் வாழ்கின்றார்கள்.

அந்தக் காலத்திலிருந்தே பூமியில் பல்லாயிரக்கணக்காண உயிரினங்களை எமது இனத்தவர்கள் அழித்தொழித்திருக்கின்றார்கள். இன்புளுவன்சா, எயிட்ஸ் ஏன் சாதாரன தடிமன் போன்றவற்றை உருவாக்கும் என்னைப் போல வைரஸ்கள் எல்லாவற்றையும் அப்போ சீனாவும் அமெரிக்காவும் தங்களுக்குள் இடம்பெற்ற சண்டையால் உருவாக்கின வைரசுகளா??

பல நுாறாண்டு காலமாக பலரை நான் கொலை செய்த போது இவ்வாறான சந்தேகங்கள் வரவேயில்லையே?? இப்போ ஏன் நான் சீனாவால், அமெரிக்காவால் உருவாக்கப்பட்டவன் என சந்தேகங்கள் வருகின்றன?? காரணம் தங்களை தாங்களே சிறப்பு ஆய்வாளர்கள் என கருதி ஊடகங்கள் மூலம் புரளிகள் விடுபவர்களாளேயே இவ்வாறான கதைகள் உலாவுகின்றன. இதற்கு நான் பொறுப்பாளி அல்ல.

5) உலக நாடுகள் பலவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மருந்து கம்பனிகள் சில உங்கள் தோற்றத்திற்கு காரணம் என்றும் உங்களை உருவாக்கி பின்னர் தடுப்பு மருந்து என்ற பெயரில் உங்களை வைத்து அவர்கள் பெருமளவு பணம் சம்பாதிக்க முற்படுவதாகவும் நான் கேள்விப்படுகின்றேன். அது உண்மையா??

பதில் – அவர்கள் முதலில் சாதாரண தடிமனுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பார்களா?? தொற்றா நோய்களான நீரிழிவு, இரத்த கொதிப்பு, இருதய நோய், சிறுநீரக நோய்கள் போன்றவற்றுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடித்தார்களா?? ஏனெனில் அவற்றினாலேயே பெருமளவு மக்கள் இறக்கின்றார்கள். இவ்வாறானவர்கள் என்னைத் தடுக்கும் செயற்பாட்டில் வெற்றி பெறுவார்கள் என நான் நம்பவில்லை.

என்னை வைத்து மருந்துக் கம்பனிக் மட்டுமல்ல சாதாரண வர்த்தகர்களே உழைக்கின்றார்கள் தானே.. தற்போது யாழ்ப்பாணத்தில் பருப்பு 60 ரூபாக்கு வாங்க முடியுமா?? ஆகவே மருந்துக் கம்பனிகள் முதல் அனைத்தும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை தமக்கு சாதகமாக்கி வியாபாரம் செய்ய முற்படுகின்றார்கள்

.
6) கே – நீங்கள் முதல் முதலில் மனிதருக்குள் புகுவதற்கு முதல் நீங்கள் எங்கு இருந்தீர்கள்??

பதில் – துணிலும் இருந்தேன்… துரும்பிலும் இருந்தேன்… உன்னிலும் இருக்கின்றேன்… அனைவரிடத்திலும் இருக்கின்றேன்….

7) கே – அப்போ நீங்கள் கடவுளா??

பதில் – கடவுள் என்பவன் மனிதால் உருவாக்கப்பட்டவன். நான் இயற்கையாகவே எங்கும் நிறைந்துள்ளேன்….

8) கே – அப்போ ஏன் உங்களுக்கு மனிதன் பயப்படுகின்றான்?? எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள நீங்கள் ஏன் குறிப்பிட்ட சிலரிடம் பரவுகின்றீர்கள்?

9)பதில் – தடிமன் எவ்வாறு உண்டாகின்றது,, என்பது உமக்கு தெரியுமா?? நல்ல வெயிலில் பல மணி நேரம் ­­­நின்றுவிட்டு உடனடியாக போய் குளிர் நீரில் குளித்தால் தடிமன் (ஜலதோசம்) வரும் என்கின்றார்களே… அது உண்மைதானே…அவ்வாறெனின் அந்த தடிமன் வருவதற்காக காரணமாக இருந்த வைரஸ் எங்கிருந்தது?? உன்னில் இருந்ததா?? தண்ணீரில் இருந்ததா? வளியில் இருந்ததா??

தடிமன் வைரஸ் மனிதனுள் நுளைவதற்கு அல்லது இயங்குவதற்கு காரண ஊக்கியாக இருந்தது மனிதனின் உடம்பு நிலையின் செயற்பாடே ஆகும். அதாவது அவன் வெயிலில் நின்று கூத்தாடிய பின்னர் உடனடியாக குளிர் நீரில் குளித்தமை துாங்கிக் கிடந்த வைரசை ஊக்கிவித்துள்ளது.
அவ்வாறு உருவாகிய தடிமன் நீ தும்மும் போதும் இருமும் போதும் தொடும் போதும் காற்றில் பரவுகின்றது. அப்படி பரவினாலும் அது எல்லோருக்கும் தொற்றுவதில்லை.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கே அது தொற்றுகின்றது. அப்படித்தான் நானும் தொற்றுகின்றேன்…

என்னிலும் பார்க்க தடிமன் உண்டாக்கும் என்ர உறவு வேகமாக பரவுபவன்… கொப்பளிப்பான் என்று கூறப்படும் சின்னம்மை (chickenpox) நோயை உண்டாக்கும் வைரசும் இருமல், தும்மல், தொடுதல் போன்றவற்றின் மூலம் வேகமாகப் பரவும். அத்துடன் என் வேகத்தை விட கூடிய வேகத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு பரவும்.
தற்போதய 650 கோடிகளுக்கு மேல் உள்ள உலக சனத்தொகையில் எனது தாக்குதலுக்கு உள்ளானவர்கள் வெறும் 10 லட்சத்துக்கும் குறைவான மக்களே… இது 65 ஆயிரம் மக்களில் ஒருவருக்கு என்ற அடிப்படையிலேயே நான் தொற்றியுள்ளேன். ஆனால் தடிமன், ஏனைய வைரஸ் காய்ச்சல் வராத யாராவது ஒரு மனிதனை உங்களால் குறிப்பிட முடியுமா??

கொரோனா என்ற நான் கடுமையான வேதனையை மனிதர்களுக்கு உண்டாக்குகின்றேன் என்ற காரணத்தாலும் முக்கியமாக உலகின் பணக்கார நாடுகளில் உள்ளவர்களையும் சொகுசு வாழ்கை வாழ்ந்து வந்த செல்வந்தர்களையும் அதிகாரத்தரப்பினரையும் ஆட்டிப்படைக்கின்றேன் என்பதாலுமே என்னைக் கண்டு கடுமையாகப் பயப்படுகின்றார்கள். என்னால் கொல்லப்பட்டவர்கள் தொகை என்பது லட்சத்தில் ஒருவர் கூட இல்லை என்று சொல்லலாம். எயிட்ஸ், சாள்ஸ் மற்றும் பல கொடிய கொலைகார வைரஸ்களை விட நான் பொல்லாதவன் இல்லை என்றே நான் நினைக்கின்றேன்.

10) கே – பணக்காரர்களையும் சொகுசாக வாழ்பவர்களையும்தான் நீங்கள் குறி வைப்பதாக நான் எண்ணுகின்றேன். அது உண்மையா??

பதில் – எனது வடிவம் பிசுபிசுப்பானது. கொழுப்புள்ளது. ஜெலி போன்றது. ஆகவே குறிப்பிடத்தக்க வெப்பநிலையில் நான் செயலற்றுப் போய்விடுவேன். நல்ல குளிர் நிலையான இடங்களில் நான் நீண்டகாலம் வாழ வழியுள்ளது.

பணக்காரர்கள், சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் காற்று சீராக்கிகள் மூலம் தமது சூழலை நல்ல குளிர் நிலையில் வைத்திருப்பார்கள். அவர்கள் சூரிய ஒளியை புறந்தள்ளி திரிவார்கள். அத்துடன் சூரிய ஒளியில் உள்ள சத்துக்களை அவர்கள் பெற்றிருக்க மாட்டார்கள். அதனால் அவர்களுக்குள் புகுவது சிரமம் இல்லாததாக இருக்கும். அத்துடன் ஏழைகளுக்குள் புகுந்தாலும் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியானது என்னை அவர்களது உடலில் செயற்படாத தன்மையில் வைத்திருக்கும். நான் அவர்களுள் புகுந்தாலும் அவர்களை தாக்க முடியாது. அவர்கள் மூலம் ஏனையவர்களை தாக்க வசதியாக இருக்கும். சொகுசாக வாழ்பவர்களை நான் தாக்கினாலும் அவர்கள் அதற்கு ஈடாக மூச்சிறைக்க போராடுவார்கள்.

அவர்களிலும் நோய் எதிர்ப்பு சக்தியற்ற முதியவர்களை நான் தாக்கும் போதுதான் அவர்கள் பெரும்பாலும் என்னை எதிர்க்க முடியாது போய்ச் சேருகின்றார்கள்.

முக்கியமாக 25 பாகை செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் உள்ள நாடுகளில் எனது செல்வாக்கை செலுத்த முடியாது உள்ளது கவலையளிக்கின்றது. ஏனைய நாடுகளுடன் ஒப்புடும் போது வெப்பநிலை அதிகரித்த நாடுகளில் எனது தாக்கம் குறைவாகவே காணப்படுகின்றது. அதாவது லட்சத்தில் ஒருத்தருக்கு மேல் என்னால் அவர்களிடம் நுளைய முடியாதுள்ளது. அந் நாடுகளில் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு தொற்றுவதற்காக வெளியிடங்களில் இருக்கும் நேரத்தில் நான் அந்த வெப்பநிலைக்கு ஈடு கொடுக்க முடியாமல் பொசுங்கிப் போகின்றேன்.

ஏனைய நாடுகளிலிருந்து தொற்றுடன் குறித்த நாடுகளுக்கு நான் சென்றாலும் என்னால் பெருமளவில் அங்கு மனிதர்களை தாக்க முடியாமல் இருப்பதற்கு வெப்பநிலையே காரணம். ஆனால் அங்குள்ள சில மனிதர்கள் நல்ல குளிமையான அறைகளில் கலந்துரையாடல்களை மேற்கொள்வதால் பலரை நான் இலகுவில் தொற்றுகின்றேன். ஆனாலும் அந்த மனிதர்கள் அந்த அறைகளு்ககுள் இருந்து சில மணி நேரங்களில் வெளியே வந்துவிடுவதால் அவர்களின் மேல் உடம்பில் இருந்தாலும் வெப்பத்தில் செயலற்றுவிடுகின்றேன்.

அவர்கள் சாப்பிடும் நேரம் வரை காத்திருந்து வாயினுள் செல்வதற்கு எனக்கு சந்தர்ப்பம் குறைவாகவே உள்ளது.
இருப்பினும் நான் தொற்றியவர்களுடன் நெருக்கமாக இருப்பவர்களில் சிலரிடம் நான் தொற்றினாலும் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக அவர்களுக்குள் என்னால் செயற்படமுடியாது உள்ளது.

11) கே – நீங்கள் யாழ்ப்பாணத்தில் எப்புடி உக்கிரம் காட்டுவீர்களா??

பதில் – சுவிஸ் போதகர் மூலம் புகுந்து ரணகளம் ஆக்க முயன்றேன். ஆனால் அங்குள்ள வெப்பநிலை மற்றும் சுகாதார செயற்பாட்டாளர்களின் நடவடிக்கையால் பெருமளவு பரவமுடியாத நிலையில் உள்ளேன். இருப்பினும் இன்றுவரை 4 பேருக்கு மேல் எனது தொற்று உள்ளவர்கள் என கூறி எல்லோரையும் முடக்கி வைத்துள்ள பெருமை எனக்கு உள்ளது.

12) கே – கனடா பிரதமரின் மனைவியிலிருந்து ஸ்பைன் இளவரசி மற்றும் முக்கிய உலகத்தலைவர்கள் வரை அனைவரிடத்திலும் புகுந்து விளையாடிய நீங்கள் தமிழ் அரசியல்தலைவர்களிடம் புகுந்து விளையாட சிந்திக்கவிலையா?? அவர்களில் பல வயதானவர்கள் தற்போதும் நல்ல ‘அக்ரிவிக்ரியா‘ இருக்கின்றார்கள். அவர்களிடத்தில் நீங்கள் புகுந்தால் ஓவர் நைற்றில் நீங்கள் தேசியத்தலைவராகி விடலாம்…..

பதில் – எனது பெயர் வைரஸ். என்னால் பக்ரீரியாவையும் தாக்கி செயலிழக்க வைக்க முடியும், பங்கசையும் தாக்கி செயலிழக்க வைக்க முடியும். அது போல எந்த உயிரினங்களையும் நான் தாக்கி அவற்றுக்கு பெரும் சிக்கலை உருவாக்கும் வல்லமை என்னிடம் உள்ளது. எந்த உயிர் உள்ள பொருட்களுக்கும் என்னால் புகுந்து கொள்ள முடியும். ஆனால் ஒரு வைரஸ் இன்னொரு வைரசுக்குள் புக முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

13) கே – நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை.

பதில் – உங்களுக்கு புரியாவிட்டாலும் மக்களுக்கு புரிந்தால் சரி.

14) கேள்வி – நீங்கள் தற்போது உலகத்தையே முடக்கி வைத்திருப்பதால் பல நல்ல காரியங்கள் நடக்கின்றன எனவும் இயந்திர கதியில் செயற்பட்ட மக்கள் பூமியின் இயற்கை சமநிலையை குலைத்து பல சீரழிவுகளைச் செய்து வந்தார்கள் என்றும் உணவுச் சங்கிலிக் கட்டமைப்பை மாற்றியமைத்து கேவலப்படுத்தினார்கள் எனவும் அவர்களை எல்லாம் முடக்கி பூமியை கொஞ்சம் நிம்மதிப் பெரும்மூச்சு விட வைத்துள்ளீர்கள் எனவும் பலர் கூறுகின்றார்கள். அத்துடன் தற்போது குடும்பம் என்ற ஒன்று இருப்பதை மனிதர்களுக்கு புரிய வைத்துள்ளீர்கள் எனவும் பலர் கூறுகின்றனர். ஆனாலும் உங்களைக் கண்டு உலக வல்லரசுத் தலைவர்களில் இருந்து எல்லோரும் பயப்படுகின்றார்களே….
நீங்கள் கொம்யூனிஸ்ட் (பொதுவுடமை) கொள்கை உடையவரா?? கடவுளா?? வல்லாதிக்க சக்தியா??
நீங்கள் நல்லவரா கெட்டவரா????

பதில் —- புரியலேயப்பா………..