புதினங்களின் சங்கமம்

கொரோனோவால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் யாழில் பாதிப்பு – உதவி செய்ய கோரிக்கை

கொரோனோ தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான குடும்பங்களுக்கு அத்தியாவசிய சேவைகள் எவையும் வழங்கப்படவில்லை என சுட்;டிக்காட்டப்படுகிறது.

குறிப்பாக மாவட்டத்தின் தாவடி மற்றும் சண்லிப்பாய் பகுதியில் பல நூற்றுக் கணக்கான குடும்பங்களும் அதே போல ஏனைய இடங்களில் சில குடும்பங்களும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் உதவி வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஊலகை உலுக்கி வரும் கொரோனோ தொற்று இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் யாழ்ப்பாணத்திலும் கொரோனோ தொற்றுக்கு இலக்காகிய முதலாவது நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்.
அதனையடுத்து யாழ் அரியாலையில் நடைபெற்ற சுவில் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட குடும்பங்கள் முதலில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அடையாளம் காணப்பட்ட நோயாளி வசித்தி தாவடிப் பகுதியில் நூற்றுக் கணக்கான குடும்பங்கள் பாதுகாப்புடன் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அதே போல போதகரின் ஆராதனையில் சம்மந்தப்பட்டதாக கூறப்படுகின்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் சமுர்தி வழங்கியதால் அந்த சமுர்த்தியை பெற்றுக் கொண்ட சண்டிலிப்பாயைச் சேர்ந்த குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு பல இடங்களிலும் நூற்றுக்கணக்கிலானோர் யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான அத்தியாவசிய உதவிகளை வழங்குவதாக மாவட்டச் செயலாளர் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய உதவிகளும் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் தமிழமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் இந்த உதவிகள் முழுமையாகக் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கின்ற தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் தாம் வெளியில் செல்ல முடியாத நிலையில் தமக்கான உதவிகள் போதுமானதாக இல்லை என்றும் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக அத்தியாவசிய பொருட்களே இல்லாமல் மிகவும் கஸ்ரப்படுவதாகவும் தமக்கான உதவிகளையும் அத்தியாவசியப் பொருட்களையும் விரைந்து வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.