புதினங்களின் சங்கமம்

கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் இறுதி கிரிகைகள் செய்யப்படும் முறை

கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் இறுதி கிரிகைகள் சர்வதேச தனிமைப்படுத்தல் முறைகளுக்கு அமையவே நடைபெறும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அததெரணவிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 60 வயதான ஒருவர் நேற்று ஐ.டி.எச் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

மாரவில பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

அவர் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர் என்பதோடு நீரிழிவு மற்றும் அதிக குருதி அழுத்த நோய்க்கும் உள்ளானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

கொரோன உயிரிழப்பு ஏற்பட்டால்
* சடலம் அதற்குரிய பொலிதீனால் மூடிக் கட்டப்படும்.
* இருவர் உறவினர் மட்டும் முகத்தை பார்க்க அனுமதிக்கப்படும்
* வீட்டிற்கு கொண்டு செல்லப்படாது மயானம் கொண்டு செல்லப்படும்
* எரிப்பதற்கு முன்னுரிமை ஆனால் புதைப்பதாயின் 8 அடி ஆழத்தில் புதைக்கப்படவேண்டும்
* அனைத்தையும் அரசே தன் செலவில் செய்யும்