புதினங்களின் சங்கமம்

பொலிஸாரைக் கண்டு ஓட்டம் பிடித்த மக்கள் – கொரோனோ வழிப்புணர்வு செய்த யாழ் பொலிஸார்!!

யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் மீனவர்கள் ஒன்று கூடியதால்இ பொலிஸார் சென்று ஒன்று கூடுவதை தடுத்ததுடன்இ கொரோனா வைரஸ் பற்றிய அறிவுறுத்தல்களையும் வழங்கினார்கள்.

பாசையூர் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று வந்துஇ அந்த மீன்களை கொள்வனவு செய்து கொண்டு சென்று விற்கும் வியாபாரிகள் சென்று கொள்வனவு செய்யும் போது யாழ்ப்பாணம் பொலிஸார் அந்த இடத்திற்கு அதிகளவான மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்களை வழங்கினார்கள்.

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில்இ மீனவர்கள் மீன்களை விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டதன் நிலையில்இ மீனவர்கள் பாசையூரில் சென்று அதிகமான மீனவர்கள் மீனைக் கொள்வனவு செய்து செய்துள்ளனர்.

இதனால்இ கொரோனா தொற்று ஏற்படலாம் என மீனவர்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீனவர்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்கினார்கள்.

பொது மக்களை தனி நபராக சென்று தமது தேவைகளைப் பூர்த்தி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

அதேவேளை பொலிஸாரின் வாகனம் வருவதைக் கண்டு அந்தப் பகுதியில் நின்ற பொது மக்கள் பொலிஸாரைக் கண்டு பயந்து பீதியில் ஓடியமையும் குறிப்பிடத்தக்கது.